24 special

கோவை கார் குண்டு வெடிப்பில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பு.., அண்ணாமலை கூறியது உண்மையானது...!

annamalai , mkstalin
annamalai , mkstalin

கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பிற்கு குரசான் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.கடந்த வருடம் அக்டோபர் 23-ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் எதிரே வந்த ஒரு கார் திடிரென வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தானது காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின் என்பவரால் தான் நிகழ்த்தப்பட்டது பின்னர் தெரியவந்தது. காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் காரில் இருந்த சிலிண்டரை வெடிக்க செய்து, இந்த தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த பகுதியில் கோலி குண்டுகள், ஆணிகள் எல்லாம் சிதறி கிடந்ததால் இது ஒரு தீவிரவாத செயலாக இருக்குமே என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைப்பதாக தெரிவித்தது. 


தேசிய புலனாய்வு அமைப்பு விசாரனை மேற்கொண்டதில் பல திடிக்கிடும் தகவல் வெளியாகின. ஜமேஷா முபின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு தயாரிக்க வயர், ரசாயன பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை கைப்பற்றியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், முபின் நண்பர்களான முகமது அசாருதீன், சனோபர் அலி, உமர் பரூக் ஆகியோர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் தொடர்பில் இருந்து வந்து பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதும் விசாரனையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தன.

கோயம்பத்தூர் குண்டுவெடிப்புக்கு பிறகு நவம்பர் 19-ஆம் தேதிகர்நாடகா மாநிலத்திளும் அதே மாதிரியான குண்டு வெடிப்பு ஆட்டோவில் நடைபெற்றதால் இது கண்டிப்பாக தீவிரவாத தாக்குதல் தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து வந்தார்.

அண்ணாமலை கூறியது உண்மையானது..!தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது; கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது, கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரைட்,  சோடியம், பொட்டாசியம் போன்ற வெடிமருந்துகள் தயாரிக்க பயன்படும் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக  கூறினார்.

மேலும், ஜமேஷா முபின் குண்டு வெடிப்பிற்கு முன் வாட்ஸ் அப் ஸ்டேடஸில் பதிவிட்டதாவது, ”என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது, நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள். என் குற்றங்களை மன்னித்து, என்னுடைய இறுதி சடங்கில் பங்கேற்று எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாசகத்தை முபின் பதிவிட்டுள்ளதால், இது கண்டிப்பாக தற்கொலை படை தாக்குதல் தான் என அண்ணாமலை திரும்ப திரும்ப தெரிவித்து வந்தார். 

இந்நிலையில், தற்பொது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை போன்றே,  குராசன் மாகாணத்தை  தலைமையிடமாக வைத்து இயங்கிவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஊதுகுழலாக செயல்படும் “வாய்ஸ் ஆஃப் குராசன்” இதழானது, 68 பக்கங்கள் கொண்ட தங்களது இதழின் 23-ஆவது பக்கத்தில், எங்கள் அமைப்பு தென்னிந்தியாவில் இருப்பதாகவும், தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

கார் குண்டுவெடிப்பு நிகழ்த்த பட்டத்திலிருந்தே தமிழகத்தில் காவல்துறையின் நடவடிக்கைகளும் இன்னும் மேலோங்க வேண்டும் என்றும், இந்த தாக்குதல்கள் தீவிரவாத தாக்குதலாக தான் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிவந்தார். இந்நிலையில், தற்போது அவர் கூறியதை போன்றே கார் குண்டுவெடிப்பு தாக்குதலானது தீவிரவாத தாக்குதல் தான் என்பது உண்மையாகி உள்ளது.