யார் சொன்னா கேக்குறாங்க.. பட்டா தான் தெரியும் போல என்ற ஒரு மன நிலையில் OPS தரப்பில் நெருங்கிய வட்டார தகவல் பேசிக்கொள்வதாக தகவல் கசிந்து உள்ளது .
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஸ் தரப்பில் இருந்தும் எடப்பாடிக்கு போட்டியாக வேட்பாளரை அறிவித்து விட்டு, பாஜக தங்கள் வேட்பாளரை நிறுத்தினால் ஒபிஸ் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற வைக்கும் என நேரடியாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். அன்றைய நிலையில் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்றும் சட்ட போராட்டம் இருந்தது.
பின்னர் பாஜக தலையீடு காரணமாக ஓபிஸ் ஐ சமாதானப்படுத்தி தான் முன்னிறுத்திய வேட்பாளரை வாபஸ் பெற வைத்தது பாஜக. ஆனால் அப்போது ஒபிஸ் பாஜக விடம் , எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படாதீஙக.. ஒருவேளை அவர் வெறி பெற்று விட்டால் கண்டிப்பாக பாஜகவை நினைத்து கூட பார்க்க மாட்டார். இவ்வளவு ஆண்டுகளாக கூட்டணியில் பாஜக இருக்கிறதே என்றெல்லாம் கூட நினைக்காமல் தனித்து முடிவெடுப்பார். எனவே அவருக்கு ஆதரவு தராதீங்க என பலமுறை சொல்லி இருந்தாராம் ஓபிஸ் . இதனை எல்லாம் அலசி ஆராய்ந்த பின் கூட எடப்பாடி க்கு ஆதரவாக நின்றது பாஜக.
அதன் பிறகு. எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது ..... ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களுக்கு ஏகப்பட்டதை வாரி வழங்கும் போட்டிக்கு நடுவில் டெபாசிட்டை வாங்கியது அதிமுக. தமிழக அரசியலில், இப்படியான நகர்வு இருந்த தருணத்தில் திடீரென பாஜக- அதிமுக இடையே இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் மாறி மாறி கருத்து சொல்லிக்கொண்டு வந்ததால் கூட்டணி விரைவில் முறியப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 4 நாட்களாகவே இது குறித்து மட்டுமே மீடியாக்களும் விவாதம் செய்து வந்த நிலையில், இதுதான் சரியான நேரம் பாஜகவை அட்டாக் மேல் அட்டாக் செய்வதற்கு என .. ஆளும் தரப்பும் பாஜக குறித்தும், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் மீண்டும் மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து திமுக ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தது. இன்னொரு பக்கம் அதிமுக பாஜகவை விமர்சனம் செய்ய தொடங்கியது. இது போதாது என காங்கிரஸு சார்ந்த மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் , இன்னும் சில நாட்களில் பாஜக கூடாரம் காலியாகி விடுமோ? என கிண்டல் செய்வது போல் பதவிட, அதற்கும் பாஜக தரப்பு அமர் ராகுலை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட.... இதனை எல்லாம் ஒரு படி மேலே சென்று கூர்ந்து கவனிக்கும் ஓபிஸ் தரப்போ.... " இதை தான் நான் அப்பவே சொன்னேன்... எடப்பாடியை நம்பாதீங்க..
அவர் எப்போதும் தன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பார்.. அவராகவே தான் முடிவு எடுப்பார்..." நான் அப்பவே சொன்னேன் ... இவங்க தான் யாரும் கேட்கல என்றவாறு ஓபிஸ் நெருங்கிய வட்டாரத்தில் பேசிக்கொண்டதாக தகவல் கசிந்து உள்ளது. அதே வேளையில் அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்னை வெடித்துள்ளது....இதுதான் சரியான நேரம் பாஜகவை தாக்க என்ன முடிவோடு காத்திருந்த பல எதிர்க்கட்சிகளுக்கு புஷ்வாணம் ஆவது போல , இன்று எடப்பாடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்னையுமில்லை ஒரு நெத்தியடி பதிலை கொடுத்து எதிர்க்கட்சிகளின் திட்டத்தை புஷ்வாணம் ஆக்கிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்