பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும்,மாநில அரசு குறைக்காததை கண்டித்து பாஜக தரப்பில் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோட்டையை நோக்கி நடந்த மாபெரும் போராட்டம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
அது எப்படி கோட்டையை நோக்கி அவ்வளவு ஈசியாக இப்படி போராட்டம் நடத்த முடியுமென பெரும் சந்தேகத்தோடு கடந்த சில நாட்களாக ஒரு பரவலான பேச்சு அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டு வந்தாலும், அப்படிப்பட்ட போராட்டத்தை எப்படி எளிதாக கையாளுவது என தமிழக அரசும் திட்டம் தீட்டி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து இருந்தாலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கூட்டம் கூட்டமாக சென்னைய நோக்கி பாஜகவினர் படை எடுத்து வர முடியுமா?
என்ற அனைத்து கேள்விக்கும் விடையாக இன்று, திருவாரூரில் கூடிய கூட்டத்தை காட்டிலும், கோட்டையை நோக்கிய பேரணி கூட்டத்தில் கலந்துக்கொண்ட கூட்டம் கடலென காட்சி அளித்தது. இதனை பார்த்த ஆளும் கட்சியே மிரண்டு போயுள்ளதாம். அதில் குறிப்பாக, பட்ட பகலில் சுட்டெரிக்கும் சூரிய வெயிலில் கொஞ்சம் கூட அசராமல் பாஜகவினர் சேர்ந்த கூட்டத்தை பார்க்கு போது, இது கூட்டிய கூட்டமா ? அல்லது தானா சேர்ந்த கூட்டமா? என்பது போல மக்களை உணர வைத்தது.
இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், கடந்த 4 நாட்களாக அண்ணாமலைக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் தங்களை இழிவாக பேசியதாக கண்டன குரல்களை எழுப்பி, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நேற்று இரு பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் சார்பாக போராட்டம் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் பிரஸ் மீட்டில் பங்கேற்க கூடாது என்றும், சில கடுமனையான வார்த்தைகளால் அண்ணாமலையை விமர்சித்தும் சில பத்திரிக்கியாளர்கள் பேசினார். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பாஜக ஆதரவு கார்த்திக் கோபிநாத் என்பவரையும் பண மோசடி செய்துள்ளதாக கைது செய்து, அதனை அண்ணாமலையோடு தொடர்பு படுத்தி பெரிதாக்கி முயற்சி செய்தனர்.
ஆனால் அது நேற்று.. இது இப்போ என்பது போல, இன்று கோட்டையை நோக்கி போராட்ட பேரணி நடத்தினர். இந்த பேரணியை மீடியா கவரேஜ் செய்ய நிறைய பேர் வரமாட்டாங்க என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், அண்ணாமலை மைக்கை பிடித்ததும்.. நீயா நானா என போட்டாபோட்டி போட்டுக்கொண்டு கேமெராவை சென்டர் பாயிண்டில் வைக்க முந்திக்கொண்டனர் முன்னணி மீடியாக்கள்.
அதாவது, நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் போராட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் தெரிவிக்கும் போது, நாம் நம் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். எனவே நாம் வேலை செய்யும் நிறுவனங்கள் தான் முடிவு செய்து, அண்ணாமலை மன்னிப்பு கேட்கும் வரை பிரஸ் மீட்டில் பங்கேற்க கூடாது என தெரிவித்து இருந்தனர். ஆனால் இன்றோ, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அண்ணாமலையின் முன் கூடினர் பத்திரிக்கையாளர்கள். இதனை பார்த்து போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்கள் மிகவும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமா என பார்த்தால், இன்றைய கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மீடியா என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஓநாய்கள் தான் எங்களுக்கு பிரச்சனை என குறிப்பிட்டு பேசினார். அதே வேளையில் உண்மையான மீடியா நண்பர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை விட மூன்று மடங்கு அதிகமாக கொடுப்போம் என தெரிவித்தும், நேற்றைய போராட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் எனது பேச்சு நியாயம் என்று கருதி போராட்டத்தினை புறக்கணித்த உண்மை செய்தியாளர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்!
என ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, அண்ணாமலை குறிப்பிட்ட அந்த உண்மை செய்தியாளர்கள் மட்டுமின்றி, போராட்டத்தில் குதித்த பத்திரிக்கையாளர்கள் பணிபுரியும் நிறுவன ஊடகங்களும் கூட அண்ணாமலை பேச்சை கவர் செய்ய ஓடோடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பொதுமக்கள் பலரும் சமுக வலைத்தளங்களில் பதிவிடும் போது., அண்ணாமலை இனி யாராலும் தவிர்க்க முடியாத தலைவர், காரணம் அவர் ஒரு திறமை வாய்ந்த நேர்மையாக பேசக்கூடிய இளைஞர்களின் கனவு அரசியல்வாதியாகவும், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய சக்தியாகவும் வளர்ந்து வருகிறார் என புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.