ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் மாறினாலும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து பணியில்தான் இருப்பார்கள், உண்மையான ஆட்சி அதிகாரம் என்பது அரசு ஊழியர்கள் கையில்தான் இருக்கிறது, எனவே ஆட்சியில் பொறுப்பேற்கும் எந்த அரசாங்கமும் அரசு அதிகாரிகளை தங்கள் கையில் வைத்து கொள்ளதான் நினைக்கும் அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும், இருந்த இரண்டு திராவிட கட்சிகளும் அரசு ஊழியர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதை முக்கிய கொள்கையாகவே கொண்டு இருந்தன.
அதிலும் காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதை அனைத்து முதல்வர்களும் ஆட்சியாளர்களும் முக்கிய பங்காக கருதுவர், குறிப்பாக தமிழகத்தில் உள்துறை அமைச்சகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் முதல்வர்கள் மட்டுமே வைத்து இருப்பார்கள் வேறு அமைச்சர்களுக்கு கூட அந்த இலாகாவை ஒதுக்குவது இல்லை.
அப்படிப்பட்ட காவல்துறையில் IAS அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை பலர் பாஜக முக்கிய பிரமுகர்கள் மத்திய உளவு அமைப்புகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவல்தான் ஆளும் ஆட்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
திண்டுகல்லில் காவலர் ஒருவர் பாஜக ஆதரவு பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வந்த காரணத்தினால் அவரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது ஒரு புறம் என்றால் மாதம் மாதம் ஒரு காவல்துறையினர் எங்காவது பாஜகவிற்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவது தொடர்கதையாக மாறி இருக்கிறதாம், வழக்கமாக திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு ஆதரவான காவல்துறையில் சில நபர்கள் இருப்பது தமிழகத்தில் இயல்பான ஒன்று ஆனால் இதுவரை தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வராத பாஜகவிற்கு ஆதரவாக காவல்துறையினர் மத்தியில் உண்டான சிறிய மாற்றம் ஆளும் தரப்பை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தங்கள் துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்து முன்பு எல்லாம் மேல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியவர்கள், இப்போது மாநில அரசை தாண்டி மத்திய அரசு அதிகாரத்தில் இருக்கும் பாஜகவிற்கு விவரத்தை அளிக்கிறார்களாம், அவர்களும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று பல்வேறு திருப்பங்களை உண்டாக்கி இருக்கின்றனர்.
இன்னும் 4 நாட்களில் மிக பெரிய ஊழலை ஆதரங்களுடன் வெளியிடுகிறோம் என அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார், இந்த தகவல்களை மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் IAS அதிகாரிகள் அண்ணாமலையிடம் கொடுத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்து இருக்கிறதாம்.
இப்படி காவலர் தொடங்கி IAS அதிகாரிகள் வரை பாஜகவிற்கு ஆதரவாக திரும்பிய நிகழ்வு பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, அரசு ஊழியர்கள் நினைத்தால் என்ன நடக்கும் என்பது பல மாநிலங்களில் வெட்ட வெளிச்சமாக தெரிந்த விஷயம், இப்போது பாஜகவிற்கு ஆதரவாக தமிழகத்தில் பெரிய அளவில் இல்லாமல் ஒரு சதவிகித அளவிற்கு அரசு ஊழியர்கள் இருப்பதே பல அமைச்சர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது, இதுவே நாளை நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 5% அளவிற்கு மாறினால் கூட மிக பெரிய மாற்றங்கள் உண்டாகலாம் என்று ஆளும் தரப்பு அதிர்ச்சி அடைந்து இருக்கிறதாம்.
அண்ணாமலை முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதும் ஒரு காவலர் மாநிலத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்தால் தங்களுக்கு பெருமை என வெளிப்படையாக பல காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் தெரிவித்து வருகிறார்களாம்.
விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படத்தில் நேர்மையான அரசு அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகளை அடையாளம் காட்டுவர் அது போல் தற்போது பல அரசு அதிகாரிகள் சத்தமில்லாமல் பாஜகவிற்கு ஆதரவாக தங்கள் மனநிலையை மாற்றி இருப்பது, ஆளும் தரப்பை மனநிலை குழப்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறதாம்.
அடுத்த பதிவில் பாஜக திருச்சியில் நடத்த இருக்கும் மிக பெரிய ஆர்ப்பாட்டம் குறித்தும் அதில் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை FOLLOW செய்து கொள்ளவும்.