24 special

விடுதலை சிறுத்தைகளுக்கு அறிவாலயம் இறக்கிய ஆப்பு... தேர்தல் கதறல் ஆரம்பம்...

MKSTALIN, THIRUMAVALAVAN
MKSTALIN, THIRUMAVALAVAN

இந்திய நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகளை யார் ஆட்சி புரிய உள்ளார் என்பதற்கான தேர்தல் தேதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் தொடங்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது மேலும் லோக்சபா தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அறிவித்தார். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தனது கூட்டணி ஆலோசனைகளையும் தொகுதி பங்கீடுகளையும் முடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதோடு இன்று லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளதை அறிவித்து நாமினேஷனையும் செய்ய வேண்டும். அதனால் தேர்தல் களமே இன்று பரபரப்பில் ஆழ்ந்துள்ளது .


முன்னதாக கடத்த 15ஆம் தேதி மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்த பிரதமர் கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்பொழுது தொழில்நுட்ப உதவிகளுடன் தமிழில் உங்களுடன் விரைவில் பேச உள்ளேன் என்றும் கூறி தமிழக மக்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இதனை அடுத்து கடந்த 18ஆம் தேதி கோவையில் ரோட் ஷோவை தமிழக பாஜக ஏற்பாடு செய்தது அதோடு அதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு கோவை மக்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்தார். அதாவது கோவை கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகில் தொடங்கி ஆர் எஸ் புரம் தலைமை தபால் நிலையம் வரை மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வாகன பேரணியில் பொதுமக்கள் அனைவரையும் சந்தித்தார். இறுதியில் 1998 ஆம் ஆண்டு கோவை மாநகரை உலுக்கிய குண்டுவெடிப்பில் தங்கள் உயிர்களை இழந்த மக்களின் உருவப்படங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த சாலை பேரணியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரதமரை கண்டு உற்சாகத்தில் மோடி மோடி என்று கத்திய வீடியோக்கள் அனைத்துமே இணையத்தில் வைரலானது. இதன் தொடர்ச்சியாக சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான டாக்டர் ராமதாஸ் ஜி கே வாசன் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் பங்கேற்றார். இப்படி திரளான கூட்டணி கட்சியின் தலைவர்களை ஒருங்கிணைத்து பிரதமர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி தமிழக பாஜக சேலத்தில் ஒரு பிரம்மாண்டம் பொதுக்கூட்டத்தை நடத்தியது அரசியலிலும் கவனம் பெற்றது. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து, குடும்ப அரசியல் ஊழியர்கள் போன்றவற்றிற்கும் கண்டனங்களை தெரிவித்தார். 

இதற்கிடையில் பிரதமர் சேலத்திற்கு வருகை தரும் பொழுது பிரதமர் மோடி திரும்பி செல்ல வேண்டும் என திராவிட விடுதலைக் கழகம் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்பு கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தப் போராட்டத்தில் பிரதமருக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பியதால் போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், எப்பொழுதும் திமுக விற்கும் திமுகவின் கூட்டணி கட்சிக்கும் ஆதரவாக செயல்படும் தமிழக காவல்துறை இந்த முறை மட்டும் எப்படி பிரதமர் மோடிக்கு எதிராக திமுகவின் ஆதரவுகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்களை கைது செய்தது என்ற பின்னணியை விசாரித்த பொழுது தமிழகத்தில் மாபெரும் விவகாரமாக வெடித்திருக்கும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் திமுகவை தண்ணீர் குடிக்க வைத்துள்ளது அதனால் இதற்கிடையில் பிரதமரை எதிர்க்கிறேன் என்று பேர்வழியில் ஏதேனும் செய்துவிட்டால் இந்த நடவடிக்கை இன்னும் தீவிரமாகும் என அறிவாலய தலைமை பதறிப்போய் தனது கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்துள்ளது என கூறப்படுகிறது.