24 special

திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்களின் கூட்டம்!! இன்னும் தெரிந்துகொள்ள முடியாத மர்மம்....

THIRUPATHY
THIRUPATHY

இந்தியாவில் பணக்கார கடவுள் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒருவர்தான் திருப்பதியில் கோவில் கொண்டுள்ள திருமலை வெங்கடேசன்!! திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்று பெரியவர்கள் இப்படி கூறி இருப்பதை நாம் கேட்டிருப்போம். இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் மேற்கொண்டு சொல்கின்றனர். இந்தியாவிலேயே அதிக அளவு வருமானத்தை ஈட்டும் கோவிலாக இந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் இருந்து வருகிறது. இந்தக் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கைகளை செலுத்தி வருவதற்கு காரணம் அவர்கள் கேட்கும் வேண்டுதல்களை பெருமாள் நடத்தி தருவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. முடி காணிக்கையில் மட்டுமே பல கோடி கணக்கில் சம்பாதிக்கும் கோவிலாக இது இருந்து வருகிறது. சனி விரதம் இந்த பெருமாளை முன்னிட்டு குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு உலக அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்து வருகிறது.


மேலும் இந்த திருப்பதி லட்டானது அந்த கோவிலின் தேவஸ்தானத்தை தவிர வேறு எவரும் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் கூடாது என்று புவிசார் காப்புரிமையை பெற்றுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு தற்பொழுது கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்து கொண்டுள்ளது என்று தற்பொழுது செய்திகள் வெளியாகி வருகிறது. அது குறித்து விரிவாக காணலாம்!!ஏற்கனவே அதிக அளவில் பக்தர்கள் வரும் கோவிலாக திருப்பதி இருந்து வருகிறது. இப்பொழுது பல மாநிலங்களில் பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறைகள் விடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது அதிக அளவில் பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். அதனால் மூன்று கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் 24 மணி நேரம் அளவு காத்திருந்து சாமி தரிசனம் செய்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர் என்று தற்பொழுது செய்திகள் வெளியாகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே இதுபோன்று மக்கள் கூட்டம் அதிக அளவில் திருப்பதியில் வந்த வண்ணமே இருந்து வருகிறது என்று திருப்பதி தேவஸ்தானம் கூறி வருகிறது. 

எனவே திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 மதிப்புள்ள சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்த நிலையில் தினமும் திருப்பதியில் 20 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம்  எடுத்த கணக்கின்படி திருப்பதியில் 71,510 அளவிற்கு பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. மேலும் உண்டியலில் ரூ.3.63 கோடி வந்திருப்பதும், 43,199 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் இலவச தரிசனம் மேற்கொண்டவர்கள் திருமலையில் உள்ள வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்ததால் அதன் வெளியே பாபவிநாசம் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் அளவிற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சுமார் 24 மணி நேர அளவிற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர் என்று செய்திகள் வெளியாகிறது.

சாதாரண நாட்களிலேயே திருப்பதியில் எப்போதும் திருவிழா போல தான் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கமாக இருக்கும். தற்பொழுது தேர்தல் முடிந்ததும், பள்ளிகள் கோடை விடுமுறையில் இருப்பதாலும் இன்னும் அதிகமான பக்தர்கள் கூட்டமாக திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் காரணம் திருப்பதி மூலவரை ஒரு முறை நேரில் பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கவைக்கும் வசியம்தான் காரணம் எனக்கூறப்படுகிறது.. மேலும் பெருமாளின் முகத்தை பார்க்கும் அந்த சமயம் ஹிப்னாடிசம் செய்தது போல நாம் வசியப்பட்டு வேண்டுதல்கள் அனைத்தும் மறந்துவிடும் என்றும் கூறிவருகின்றனர்.