Cinema

பல சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் இவருடன் இணைத்து திரைப்படமா!!!! வைரலாகும் வனிதா விஜயகுமார் குறித்த செய்தி!!

Vanitha Vijayakumar
Vanitha Vijayakumar

நடிகர் விஜயகுமார் மற்றும் அவரின் இரண்டாவது மனைவியான தமிழ் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள்தான் வனிதா என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்!! நடிகை வனிதா கடந்த 2000 ம் ஆண்டில் ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்து அவர்கள் இருவருக்கும் ஒரு மகனும், மகளும் பிறந்த நிலையில் கடந்து 2005 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டில் வனிதா விஜயகுமார் தொழிலதிபரான ஆனந்த் ஜெய் ராஜனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் அவருக்கு நிலைத்து இருக்காமல் 2012 ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது.


தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த வனிதா அதன் பிறகு தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளான பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டில் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்த பீட்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம் இணையதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்த திருமணமும் நிலைத்து இருக்காமல் விவாகரத்தில் முடிந்தது. ஆனால் இதற்கு முன்னதாகவே வனிதா நடன இயக்குனரான ராபர்ட் என்பவருடன் கடந்த 2013 ஆம் ஆண்டு பழகி வந்ததாகவும், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற திரைப்படத்தை தயாரித்து வந்ததாகவும், அப்போது ராபர்ட் வனிதாவின் பெயரினை பச்சை குத்தி கொண்டதாகவும் செய்திகள் பரவியது.

ஆனால் 2017 அவர்களின் உறவு முறிந்ததை தொடர்ந்து பச்சை குத்தியது படத்தின் விளம்பரத்திற்காக என்று ராபர்ட் கூறியிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டி வந்த வனிதா அதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு கவலையும் இல்லாமல் அவரின் வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது வனிதா தனது முன்னால் கணவர் ராபர்ட்டுக்கு ஜோடியாக புதிய படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்திற்கு பிறகு எந்த ஒரு கனெக்ட்டும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் இவர்களைப் பற்றி  அனைவரும் அதிகமாக பேச ஆரம்பித்தனர். அதன் பிறகு மெது மெதுவாக அனைத்தும் குறைந்துவிட்டது. இந்த நிலையில் தற்பொழுது மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்னும் திரைப்படத்திற்கு ராபர்ட் மட்டும்  வனிதா விஜயகுமாரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று தகவல் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் கதை எதை அடிப்படையாகக் கொண்டது என்று இன்னும் சரியாக தெரியவில்லை.

மேலும் இந்த திரைப்படத்தில் வனிதாவிற்கு அப்பா அம்மா கேரக்டரில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷகிலா நடிப்பதாகவும், மேலும் முக்கிய கேரக்டரில் பிரேம்ஜி  மற்றும் சுனில் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தயாரிப்பில் வனிதாவின் மகள் ஜோதிகா ஒரு முக்கியமான பணியினை மேற்கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தினை வனிதாவின் நெருங்கிய நண்பரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழில் அதிபருமான ஒருவர்தான் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது!! மேலும் வனிதா மற்றும் ராபர்ட் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக வெளியாகி உள்ள தகவலை தொடர்ந்து இணையங்களில் அதிக அளவில் பகிரப்படும் ஒன்றாக இது இருந்து வருகிறது.