Cinema

என்னது மதுரை முத்து அப்பா இவரா...? வெளிவரும் பல உண்மைகள்...

MADURAI MUTHU
MADURAI MUTHU

கடி ஜோக் மற்றும் மொக்க ஜோக்கால் மிகவும் பிரபலமடைந்து தற்போது இவரின் காமெடிக்காக சில ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி இருப்பவர் தான் மதுரை முத்து. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் கள்ளக்குடி என்ற வட்டத்தில் பிறந்த இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற ஒரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்லா அறிமுகமானார் அதோடு தொடர்ச்சியாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அசத்தப்போவது யாரு மற்றும் ஞாயிறு கலாட்டா என்ற காமெடி ஷோக்களிலும் பங்கு பெற்று நல்ல வரவேற்பு பெற்று வந்தார் இந்த நிலையில் பிரபல தனியா தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பபட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் பழைய ஜோக் மற்றும் மொக்க ஜோக்கால் நல்ல வரவேற்பை பெற்றார். அதோடு அந்த நிகழ்ச்சியில் இவர் கூறும் ஒவ்வொரு நகைச்சுவைக்கும் மதுரவீரன் தானே .... என்ற பேக்ரவுண்ட் குரலும் ஒழிக்கப்பட்டதை அடுத்து பெரும்பாலானோர் மதுரை முத்துவின் மிகப்பெரிய விசிறியாக மாறியானார்கள்.


இதனை தொடர்ந்து தற்போது மிகவும் பிசியாக வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்த நிலையில் மதுரை முத்து ஒரு நாட்டாமை பரம்பரையின் மகன் என்பதும் இவரது தந்தை ஒரு நாட்டாமை என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அதாவது தனியார் பத்திரிகை தொலைக்காட்சி ஒன்றியத்துக்கு பேட்டி கொடுத்த மதுரை முத்து, பிரிட்டிஷாரின் காலத்தில் கிராமத்தை நிர்வாகம் செய்வதற்காக முன்சீப் கருணை சிலரை நியமித்தார்கள் அப்படி நியமிக்கப்பட்டவர் எங்களுடைய தாத்தா என் தாத்தாவிற்கு பிறகு அப்பா அந்த பதவியில் இருந்தார் ஆனால் என் அப்பாவின் காலத்தில் அந்த பதவி நாட்டாமையாக மாறிவிட்டது. எங்க ஊர் அரசம்பட்டி மட்டுமல்லாமல் அந்த ஊரை சுற்றியிருக்கிற 12 கிராமங்களுமே எங்க அப்பாவ நாட்டாமையாவும் அவர் பேச்ச தட்டவே தட்டாது! அதோடு அந்த காலத்திலேயே எங்க அப்பா கொஞ்சம் படிச்சவரும் கொஞ்சம் ஆளுமை திறன் கொண்டவர் அதனால ஊர அவரால் கட்டுக்கோப்பா வச்சுக்க முடிஞ்சுச்சு.

எங்க அப்பா தான் நாட்டாமை அப்படிங்கறதுனால காட்டில் ஆடு மாடுகளை மேய்க்க விடுவதும் சில களவாடல் குறித்த குற்றச்சாட்டுகள் எல்லாமே என் அப்பா கிட்ட தான் வரும் அந்த பஞ்சாயத்துல எங்க அப்பா சொல்ற தீர்ப்ப கேட்டு ரெண்டு தரப்பினருமே மறுத்து பேசாம போயிடுவாங்க! என்ன தப்பு நடந்தாலும், என்ன பிரச்சனை நடந்தாலும், என்ன சண்டை நடந்தாலும் எங்க அப்பா தீர்ப்பு சொல்லாம இருந்ததே இல்ல ஆனா ஒரே ஒரு விவகாரத்துக்கு மட்டும் தீர்பே சொல்லாமல் நழுவி எஸ்கேப் ஆயிடுவாரு..அதாவது கணவன் மனைவி ரெண்டு பேருக்கு இடையில ஏதாவது பிரச்சனை இருக்கு அப்படின்னு மட்டும் பஞ்சாயத்துக்கு வந்துட்டா நாளைக்கு பஞ்சாயத்துல பாத்துக்கலாம்னு சொல்லி திருப்பி அனுப்பி விடுவாரு ஆனா விடிஞ்சதும் முதல் ஆளா வெளியூருக்கு கிளம்பி போய்டுவாரு வெளியூருக்கு போயி மூன்று நாள் கழிச்சு தான் ஊரு திரும்புவாரு ஆனா அவர் ஊரு திரும்பும் போது கணவன் மனைவிக்குள்ள இருந்த பிரச்சனை தீர்ந்து சமாதானம் ஆகிடுவாங்க அவங்களே சமாதானம் ஆகணும் அப்படிங்கறதுக்காக இந்த கால அவகாசத்தை அவங்க கிட்ட கொடுத்துட்டு எங்க அப்பா வெளியூருக்கு போயிருவாரு. 

அப்படிபட்ட நாட்டாமைய இருந்த எங்க அப்பாவோட பதவி போறதுக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காரணமா இருந்தாரு, ஏன்னா எம்ஜிஆர் அவர்கள் நாட்டாமை அப்படிங்கிற பதவியை மாத்தி விஏஓ பதவியைக் கொண்டு வந்தார் அதனால எங்க அப்பாவுக்கு எம்ஜிஆர் பிடிக்காது, அதே மாதிரி நான் டிவில இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எங்க அப்பாக்கு பிடிக்காது இது என்ன கூத்தாடி வேலை அப்படின்னு சொல்லி என்னையே திட்டுவாரு... ஆனா ஒரு தடவை மதுரை கலெக்டர் ஆஃபீஸ்க்கு போய் இருக்கும்போது கலெக்டர் கிட்ட எங்க அப்பாவ மதுரமுத்துடைய அப்பான்னு அறிமுகப்படுத்தினாங்க அப்பதான் அந்த கலெக்டர் உங்க பையனோட காமெடி எல்லாம் நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லும் போது எங்க அப்பாக்கு சரி நம்ம பையன் ஏதோ உருப்படியா பண்றான்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு... இருந்தாலும் இன்னைக்கு எவ்ளோ பேரும் புகழும் இருந்தாலும் அது என்னோட திறமையால மட்டும் கிடைச்சது கிடையாது எங்க அம்மா அப்பா செஞ்ச புண்ணியம் தான் என்று மிகவும் உருக்கமாகவும் காமெடி கலந்தும் தனது தந்தையை குறித்து சுவாரசியமாக பேசி உள்ளார்.