சத்தம் இல்லாமல் சிங்கப்பூர் சென்ற திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடந்த சில மாதங்களாக திமுக அமைச்சரவை பற்றிய செய்திகள், திமுக அமைச்சரவையில் நடக்கும் நிகழ்வுகள் பேசுபொருளாக மாறுவதும், சர்ச்சைகளை ஏற்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.
அதாவது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் ஒவ்வொரு வருடமும் சிறுக சிறுக சொத்துக்களை குவித்து வந்து தற்போது அந்த சொத்தின் மதிப்பு 30 ஆயிரம் கோடியாக வளர்ந்துள்ளதையும், அதை மற்றவர்களிடம் மாட்டாமல் பாதுகாப்பது எப்படி என அன்றைய பொழுதில் நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தன் கவலைகளை கூறிய ஆடியோ பதிவு முதலில் வெளியானது.
இரண்டாவதாகவும் கட்சியின் விவகாரங்களை பற்றி அதில் நடைபெறும் நடைமுறைகளை பற்றியும் விமர்சித்திருந்தார். இந்த இரண்டு ஆடியோக்களால் திமுக அரசியலில் மாபெரும் எதிர்வினைகள் வெடித்தது. பல விமர்சனங்களையும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்கொண்டார். பிறகு இந்த ஆடியோ வெளியான விவகாரத்தால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று செய்திகள் பரவிக் கொண்டிருந்தது.
அந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திமுக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. திமுக அரசின் பின்னடைவிற்கு காரணமாக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் பதவியை மட்டும் மாற்றினால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகுவோம் மேலும் சந்தேகம் ஏற்படுமோ என்ற எண்ணத்தில் மற்ற சில அமைச்சர்களின் பதவியை மாற்றினார் முதல்வர் ஸ்டாலின் என அரசியல் விமர்சகர்கள் கூறினார்.
அதன்படி பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசரை பதவியில் இருந்து நீக்கியதும், தொழில்துறை அமைச்சராக டி ஆர் பி ராஜாவும், நிதி மற்றும் மனித வள துறை அமைச்சர் பதவி தங்கம் தென்னரசிற்கும், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக பழனியில் தியாகராஜனும் பதவி ஏற்றனர். பிறகு புதிதாக டிஆர்பி ராஜா தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
பதவியேற்றத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் டிஆர்பி ராஜா. தமிழகத்தை தொழில்துறையில் முன்னணிலைப்படுத்த உழைப்பேன் மற்றும் டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்களையும் உருவாக்குவேன் என்று கூறினார் மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்கள் செல்ல உள்ளதற்கு நானே ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தார். அதன்படி நாளை முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் முன்னதாக நேற்று டி ஆர் பி ராஜா சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமைச்சராக பொறுப்பேற்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென முதல்வர் செல்லும் ஒரு நாளைக்கு முன்பதாக சிங்கப்பூர் சென்றுள்ளதற்கு பின்னால் ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்று அரசியல் வட்டாரங்கள் முனு முனுத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள உள்ளார், அதற்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்காக டிஆர்பி ராஜா தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார் என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றப்பட்டு புதிதாக பதவியேற்று டிஆர்பி ராஜா ஒரு வாரத்திற்குள்ளேயே சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து திமுக தரப்பில் முதல்வர் செல்ல உள்ளதற்கு டிஆர்பி ராஜா முன்னேற்பாடுகளை செய்ய உள்ளார் அதற்காகவே சிங்கப்பூர் செல்கிறார் என கூறப்பட்டாலும் இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்களின் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.