தமிழகத்தில் நேற்று இரவு மற்றும் அதற்கு முன்னர் அரங்கேரிய இரண்டு முக்கிய சம்பவங்கள் மீண்டும் முதல்வரின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறதாம் ஒன்று மத்திய நிதி அமைச்சகம் போட்ட உத்தரவு இரண்டாவது ஆளுநர் தலைமை செயலாளருக்கு முழு பக்க விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி இருப்பது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை டாஸ்மாக் மற்றும் கூட்டுறவு சங்க வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை கண்காணிக்க வேண்டும் என கடிதம் எழுதியதோடு நில்லாமல் தொலைபேசி வாயிலாகவும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி டாஸ்மாக் போன்று மற்ற நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை கண்காணிக்க இருக்கிறதாம்.
தமிழகத்தில் போக்குவரத்து சங்கங்கள் தொடங்கி பல அமைப்புகள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கும் நிலையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மார்க் கடைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கலாம் என தெரிவித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறதாம்.
இந்த சம்பவம் முதல்வர் கவனத்திற்கு செல்ல புதிய வடிவில் சிக்கல்கள் வருமோ என்ற அச்சம் உண்டாகி இருக்கிறதாம்.இது ஒரு புறம் என்றால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ய உத்தரவு போட்ட நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என நேற்று பாஜக முக்கிய தலைவர்கள் ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் தனக்கு வந்த புகார் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கடிதம் மூலமாக ஆளுநர் விளக்கம் கேட்க இருப்பதாகவும் குறிப்பாக செந்தில் பாலாஜி மீதான வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை நடத்தும் வகையில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வது அல்லது இலாகா இல்லாத அமைச்சராக மாற்ற ஆளுநர் முதல்வரிடம் அறிவுருந்த இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் சமீபத்தில் நடத்த டாஸ்மார்க் குளறுபடிகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற பல்வேறு விவகாராங்கள் என்ன பின்விளைவுகளை உண்டாக்க போகிறதோ என முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படும் செய்திதான் தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.