24 special

பத்திரிகையாளரிடம் சிக்கிய திமுக எம்.பி..வச்சு செஞ்ச பெண்..!

Abdulla , soniya arunkumar
Abdulla , soniya arunkumar

'எம்.பியா இல்லைனா எச்ச பொறுக்கின்னு கேட்டு இருப்பேன்' என திமுக எம்பி எம்.எம்.அப்துல்லாவை பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சமூக வலைதளங்களில் முன்பை போல் அரசியல்வாதிகள் கருத்து கூறும் பொழுது மேடையில் சவால் விடுவதைப் போல் ஏதாவது பேசி விடுவது சர்ச்சையாகிவிடுகிறது. மேடையில் என்ன பேசினாலும் அந்த பகுதியில் உள்ள 500, 1000 பேருக்கு மட்டும் தான் தெரியும்! அதைவிடுத்து அதிக பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. எந்த ஊரில் பேசுகிறார்களோ அந்த ஊரில் அந்த மக்களுக்கு மட்டும் தான் தெரியும்! அதிகபட்சமாக பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளோ வந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு தெரியும். 

ஆனால் சமூக வலைதளம் அப்படியல்ல கோடிக்கணக்கான பெயர் உலாவும் இடம், ஒரு விஷயம் கூறினால் அது அப்படியே சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதை இன்னமும் திமுகவினர் உணர மறுக்கிறார்கள். மேலும் ஆட்சிக்கு வந்த அதிகாரத்தில். ஆளுங்கட்சி என்ற ஆணவத்தில் திமுகவினர் அலைகிறார்கள் எனவும் அரசியல் ரீதியாக பலர் விமர்சனம் செய்த நிலையில் பெண் பத்திரிகையாளர்களிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா வாய் விட்டு 'எச்ச பொறுக்கி' என திட்டு வாங்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சோனியா அருண்குமார் என்பவர் பெண் பத்திரிகையாளராக இருக்கிறார், இவர் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரபரப்பாக இயங்கக்கூடியவர், சினிமா விளம்பரம் செய்வது மற்றும் அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகம் இணையத்தில் பதிவேற்றுவார். இவரது பதிவுகள் கவனத்தை ஈர்த்த இந்த நிலையில் இவரது கூறிய கருத்து ஒன்றை விமர்சனம் கூறும் விதமாக குறிப்பிட்ட பதிவு சர்ச்சை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் 'எச்ச பொறுக்கி' என திமுக எம்.பியை திட்டு வாங்க வைத்துள்ளது.

திமுக எம்பி எம்.எம் அப்துல்லா அவரது ட்விட்டர் பதிவில் பத்திரிகையாளர் சோனியா அருண்குமார் பதிவை மேற்கோள் காட்டி, 'நான் இப்ப எம்.பி.ஆகிட்டேன்.. முன்ன மாதிரி ட்ரோல் மாஸ்டரா மட்டும் இருந்திருந்தா.. 'ஒரு அத்தை ஒரு மாமா’ குட் காம்பினேஷன்னு காதல் படத்துல வர்ற டைரக்டர் கேரக்டர் படம் போட்டு மீம்ஸ் போட்டு இருப்பேன்!' என பந்தாவாக கூறுவதாக நினைத்துக்கொண்டு தான் ஒரு எம்.பி என்பதை மறந்து முதிர்ச்சி இல்லாமல் பதிவிட்டார்.

இதற்கு கோபமடைந்த பத்திரிகையாளர் சோனியா அருண்குமார் 'ஆங் அப்டியே எம்.பி ஆகி வேலை செஞ்சு இங்க மாநிலத்துக்கு சேவை பண்ணிடாப்டி, இந்த ரெண்டு வருஷம் பண்ணதே இவரை போல 4 கிறுக்கனுங்களை  ஏவி எல்லாத்தையும் கடிக்க விட்டதுதான். 'எம்பியா இல்லைன்னா எச்ச பொறுக்கின்னு கேட்டு இருப்பேன்' அப்படின்னு சோனியா கூறியவுடன் அப்படியே அமைதியாகிவிட்டார் திமுக எம்.பி இந்த ட்வீட் செய்த பொழுது இரவு 9 மணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பொதுவெளியில் அதுவும் இரவு நேரத்தில் பெண்ணிடம் எப்படி பேசுவது, பத்திரிகையாளரிடம் எப்படி பேசுவது என ஒரு திமுக எம்பி க்கு தெரியாதா? இதுதான் இவர்கள் லட்சணமா? இதைத்தான் இவர்களுக்கு திராவிட பயிற்சி பட்டறை என கத்துக் கொடுக்கிறார்களா? இதைத்தான் அறிவாலயம் பாராட்டுகிறதா? இதற்காகத்தான் மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்களா? இதனைத் தான் இவர்கள் பெண் உரிமை, சமூக நீதி என மேடைகளில் பேசுகிறார்களா? என பல கேள்வி சமூக வலைத்தளத்தில் எழுந்து வருகிறது. 

இப்படி இரவு நேரத்தில் தன்னிலை மறந்து எம்.எம்.அப்துல்லா பேசியது தொடர்பாக விடிந்தவுடன் எம்.பி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.