24 special

பதிலடி கொடுக்க நினைத்த எடப்பாடிக்கு... நடந்த அவலம் என்ன..?

Edappadi palanisamy ,nirmalkumar
Edappadi palanisamy ,nirmalkumar

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மற்றும் அமமுக கட்சிக்கு பதிலடி கொடுக்க நினைத்து தற்போது தனது பெயரை இழந்து ஊடகங்களில் அசிங்கப்படும் சூழல் உண்டாகி இருக்கிறது.


பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த நிர்மல் குமார் என்பவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து  பாஜகவில் இருந்து விலகினார் அவரை எடப்பாடி பழனிசாமியே நேரடியாக வரவேற்று அதிமுகவில் இணைத்து கொண்டார். இந்த சூழலில் அதிமுகவை சேர்ந்தவர்கள் 420 மலை என அண்ணாமலையை விமர்சனம் செய்தனர் இந்த சூழலில் தான் தென் மாவட்டத்திற்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு கனவிலும் நினைக்காத எதிர்ப்பு கிளம்பியது.

விமான நிலைய பேருந்தில் வைத்தே துரோகி எடப்பாடி என அமமுக நிர்வாகி பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு வரலாற்றில் இல்லாத பெரும் அவமானம் உண்டானது ஏன் என்றால் தமிழகத்தை சேர்ந்த எந்த அரசியல் கட்சி தலைவரையும் இப்படி துரோகி என விமான பேருந்தில் வைத்து அவமான படுத்தியது கிடையாது.

இந்த சூழலில் ஈபிஎஸ் குறித்து வீடியோ வெளியிட்ட நபரை அவசரப்பட்டு அதிமுகவினர் தாக்க தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கல் உண்டாகி இருக்கிறது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் சென்றபோது எடப்பாடி பழனிசாமியை அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன்  துரோகி பேசி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் செல்போனை பிடுங்கினார் இது வீடியோவில் பதிவானது.

சமூக வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்ததாக அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி,முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், செந்தில்நாதன் உள்ளிட்ட 5 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது செல்போனை திருடி சென்றதாக திருட்டு பிரிவில் வழக்கு பதிவு செய்ததை நினைத்து எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

கூட்டணியில் உள்ள பாஜக மாநில தலைவரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சனம் செய்த நபரை பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் இணைத்து கொண்டபோது இனித்ததா என இப்போது எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பு கின்றனர் இதுநாள் வரை கூட்டணி காரணமாக எடப்பாடியை விமர்சனம் செய்யாத பாஜகவினர்.

எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய தென் மாவட்ட விமான பயணம் இனி அவரது வாழ்க்கையிலும் அரசியல் நிகழ்விலும் மாற்ற முடியாத ஒன்றாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை நினைத்து கூட அவர் வருந்த வில்லையாம் மாறாக திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதை பார்த்து நான் திருடனா என ஆவேசம் அடைந்து இருக்கிறாராம் எடப்பாடி.