24 special

திமுக கூட்டணி தரப்பில் பெரும் சலசலப்பு ! அமைச்சர் துரைமுருகன் கூறியது ?

duraimurugan , narendramodi
duraimurugan , narendramodi

பிரதமர் மோடியே என்னை பார்த்து ஆச்சரியப்பட்டார் என பிரதமர் மோடி சம்பவத்தை பற்றி துரைமுருகன் கூறியது திமுக பாஜக இடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் விதமாக இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 


தமிழக அரசியல் களம் தற்பொழுது 2024 தேர்தல் கூட்டணியை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கிறது, இன்னும் 12 மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி வேலைகள் இப்பொழுதே துவங்கி விட்டன, எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் நாடாளுமன்ற தேர்தல் சுமூகமாக செல்லும் என ஒவ்வொரு கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது திமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இடதுசாரிகள் போன்றவை ஒரு கூட்டணியாகவும், அதிமுக, பாஜக, தமாக, புதிய தமிழகம் போன்றவை மற்றொரு கூட்டணியில் இருந்து வரும் சூழலில் இந்த கூட்டணியில் சில மாறுதல்கள் நடக்க இருக்கும் என தெரிகிறது. 

அந்த வகையில் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்பொழுது இருக்கும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு தயாராகிவிட்டது. மறுபுறம் மெதுவாக பாஜக கூட்டணிக்கு திமுக அடி போடுவது போல் தெரிகிறது! குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இங்கு ஆளுநரை எதிர்த்து கூட்டணி கட்சிகளை போராட விட்டு விட்டு ஆளுநர் மாளிகைக்கு விருந்திற்கு சென்றனர் திமுகவினர், அது மட்டுமல்லாமல் 'கோ பேக் மோடி' என கருப்பு பலூன்களை பறக்கவிட்ட திமுகவினர் கடந்த முறை தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்த பொழுது வெள்ளைக் குடையுடன் சென்று பார்த்தனர். 

இது எல்லாவற்றையும் விட தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜகவுடன் எதிர்ப்பு போக்கை கண்டுபிடித்து வருவதை விட இணக்கமான போக்கை கடைபிடித்து வருவதே சிறந்தது என திமுகவில் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. அதன் காரணமாகவே கடந்த 10 நாட்கள் முன்பு பிரதமர் மோடியை சென்று நேரில் சந்தித்து விட்டு வந்தார் உதயநிதி ஸ்டாலின், இது கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளுக்கு பிடிக்காமல் போனது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அடியில் நெருப்பை பற்றவைக்கும் விதமாக பிரதமர் மோடி என்னை புகழ்ந்தார், என்னை பார்த்து ஆச்சரியமாக கேட்டார் என திமுக அமைச்சர் துரைமுருகன் கூறியது மேலும் பாஜகவுடன் திமுக இணக்கமாக செல்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட மேல்பாடியில் அரசு நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். அதில் பேசிய அமைச்சர், 'ஒரு நாள் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்தேன். அப்போது நரேந்திர மோடி என்னிடம், நீங்கள் தானே திமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவையில் எவ்வளவோ நாளாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு நான், 54 ஆண்டு என்று பதில் சொன்னேன். அதற்கு நரேந்திர மோடி, 'What 54 Years' என ஆச்சரியப்பட்டார். ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் என்று கூறினேன். அதற்கு இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை' என்று பிரதமர் மோடி என்னிடம் கூறினார் என்றார் துரைமுருகன். 

காங்கிரஸ் கூட்டணியின் இருந்துகொண்டு கொண்டு பாஜகவிடம் இணக்கமான போக்கை கடைபிடித்து வருவதை திமுக விரும்பினாலும், திமுகவின் கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை இது எங்கே போய் முடியுமோ என கூட்டணி கட்சிகள் தலையில் அடித்துக் கொள்கின்றன. வரும் காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லை பாஜகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து காங்கிரசை கழட்டி விட்டால் நாம் என்ன செய்வது என்றும் கூட்டணி தரப்பில் பெரும் சலசலப்பு வெடித்துள்ளது.