Cinema

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் கமல்?....சபாஷ் சரியான முடிவு!

Kamal hassan
Kamal hassan

தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகமான நிகழ்ச்சி மக்கள் இடத்தில் நீங்காத இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி மூலமே பல சின்னத்திரைக்கு திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இந்நிலையில் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இதுவரை சர்ச்சையில் சிக்காத கமல் இந்த சீசனில் சிக்கியுள்ளார். 


விஜய் டிவியில் வருடத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ், இந்த நிகழ்ச்சி சுமார் 90 நாட்கள் நடைபெறும் இந்த சீசனில் பல சின்னத்திரை பிரபலங்கள் வீட்டிற்கு உள்ளே சென்றனர். ஆரம்பத்தில் இந்த சீஸனின் வெற்றியாளர் பிரதீப் ஆண்டனி தான் என்று மக்களால் பேசப்பட்டது, மக்கள் இடத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்றார். குறிப்பாக பிரதீப்காக தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறோம் என ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். ஆண்டவர் பிரதீப் விஷயத்தில் எடுத்த முடிவின் காரணமாக வெளியில் செல்ல முடிவு எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளன. பிக் பாஸ் சீசன் 7ல் பெரும் ஆதரவு கொடுத்த பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது பிக் பாஸ் இதனால் அந்த நிகழ்ச்சியை கான மக்கள் ஆர்வம் காட்ட குறைத்துள்ளனர்.

இதன் காரணமாகவே கமல் ஹாசன் மீது சர்ச்சை தொடங்கியது. குறிப்பாக அரசியல் தலைவர்கள் கமல் ஹாசனை விமர்சிக்க தொடங்கினர் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வரம்புகளை மீறி செயல்படுவதால் இளம் தலைமுறைகளை சீர்குலைத்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பிரதீப் வெளியே சென்ற பின்  விசித்ராவுக்கு தான் இப்போது ஆதரவு பெருகி வருகிறது. உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சரியான கன்டென்ட் இல்லாததால் மக்களும் நிகழ்ச்சியை புறக்கணிக்க உள்ளார்களாம். பாதி நேரம் போட்டியாளர்களை தூங்கும் நிலைமையை ஒளிபரப்பை வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். போட்டியில் யார் கடைசி வரை சென்று டைட்டிலை வெல்லப்போகிறார் என்பது தெரியவில்லை.

மேலும், இந்த சீசனுடன் தொகுப்பாளராக முடித்து விட்டு போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்துட்டாராம். தேர்தல் நெருங்கி வருவதால் தன் ஆரம்பித்த கட்சி மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு எடுத்துள்ளாராம். தற்போது சினிமா, தயாரிப்பு, kh-233, 234 போன்ற பல படங்கள் வரிசையில் இருப்பதால் மக்கள் இடத்தில் படம் வெளியாகும் போது ஆதரவு வேண்டி முடிவு எடுத்துள்ளாராம். இவர் தான் ஆரம்பத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். அடுத்த பிக் பாஸ் 8 வது சீசனில் கமல் இல்லை என்றால் யார் தொகுப்பாளராக இருப்பார் எப்படி நிகழ்ச்சி நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருமுறை நடிகர் சிலம்பரசன் தொகுப்பாளராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.