அஸ்ஸாம் : மும்பையில் வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தற்போது பொதுமக்களை கொல்ல நீர்தேக்கத்தையும் அணைகளையும் குறிவைப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் சில்சார் மாவட்டத்தில் அமைந்துள்ள பாராக் நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள பெத்துகண்டி துணைநிலை தடுப்பை அடையாளம் தெரியாத சில மர்மநபர்கள் இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட வெள்ளம் 173 பேரின் உயிரை காவுவாங்கியது. இதனிடையே மே 24 அன்று மாநில வாட்டர் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் ஒரு புகார் அளித்தது.
அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ கவுகாத்தி தலைமையகத்தில் வழக்கு பதிந்துள்ளது. காவல்துறை விசாரணையின் அடிப்படையில் காபூல் கான், மிது ஹுசைன் உட்பட ஆறுபேர் கைதுசெய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்திற்கு நான்கு லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
சச்சார் எஸ்பி ராமன்தீப் கவுர் கூறுகையில் " வெள்ளிக்கிழமை கான் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து மிது ஹுசைன் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளான். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சதிச்செயலில் வேறு ஏதாவது பின்னணி இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.