24 special

விருதுநகரில் பாஜக செய்யப்போகும் மேஜிக்... 2000 கோடி என்ன ஆகும் ?

Rama srinivasan
Rama srinivasan

நாளுக்கு நாள் தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு மக்கள் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் வண்ணமாக சென்று கொண்டு இருக்கிறது, மேலும் திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை பாஜக சுட்டி காட்டிய வண்ணம் இருக்கிறது,சமீபத்தில் கூட மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.


இது மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிய சூழலில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது பாஜக,மத்திய அரசு  ஜவுளி பூங்கா அமைக்க நாடு முழுவதும் குறிப்பிட்ட மாநிலங்களை தேர்வு செய்து  திட்டத்தை அறிவித்தது அதில் தமிழகத்தை சேர்ந்த விருதுநகர் மாவட்டமும் ஒன்று இங்குதான் 2000 கோடி ரூபாய் செலவில் மிக பெரிய ஜவுளி பூங்கா அமைக்க தேர்வாகி இருக்கிறது.

இந்த சூழலில் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த 150 கோடி மதிப்பிலான ஜவுளி பூங்கா திட்டத்தை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லையாம்,இந்த சூழலில் மத்திய அரசு தமிழக அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து இருக்கிறதாம் 150 கோடி திட்டத்தையே கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசு எப்படி 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை நடைமுறை படுத்த போகிறது என்ற சந்தேகம் அடைந்துள்ளதாம்.

இது  பாஜக கவனத்திற்கு செல்ல உடனடியாக பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் தலைமையில் களத்தில் இறங்கி இருக்கிறது, உடனடியாக மாநில அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என திருசுழியில் இருந்து விருதுநகர் வரை நடைபயணம் மேற்கொள்ளவும், மக்களிடம்  திட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்து கூறவும் களத்தில் இறங்கி இருக்கிறது  பாஜக.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் கூறியதாவது விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குள் மத்திய அரசின் ஜவுளி திட்டம் வருவதை தமிழக அரசு அலட்சியப்படுத்துகிறது அந்தத் திட்டம் நிறைவேறாவிட்டால் 2000 கோடி மதிப்புள்ள மெகா ஜவுளி பூங்கா தமிழகத்திற்கு வருவதும் கேள்விக்குறிதான் இந்த அபாயம் தெரிந்திருந்தும் திமுக அரசாங்கம் தொடர்ந்து இந்தத் திட்டத்தை புறக்கணிக்கிறது.

துபாய் சென்று லூலு மால் கொண்டு வருவதை பெருமையாகப் பேசும் திமுக மத்திய அரசின் முதலீட்டை மறுப்பதேன்? இதை மக்கள் கவனத்திற்கு கொண்டுவர விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாபெரும் நடை பயணத்தை மக்கள் இயக்கமாக நடத்த இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பூங்கா மட்டும் தமிழகத்தில் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 40 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. லூலூ மால் கொண்டுவந்தது பெரிய சாதனை என்றால் மத்திய அரசு அறிவித்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கும் மாநில அரசு இனியாவது கவனத்தில் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விருதுநகர் வட்டாரத்தில் பாஜக ஜவுளி பூங்கா விவகாரத்தை கையில் எடுத்து இருப்பது அக்கட்சியின் மீது அம்மாவட்ட மக்களிடையே நற் பெயரை உண்டாக்கி இருக்கிறது, மத்திய அரசின் திட்டங்களை தொடர்ச்சியாக கிடப்பில் போட்டுவிட்டுதான் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று மாநில அரசு குற்றம் சுமத்துகிறதா எனவும் சாமானிய மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் தலைமையில் களத்தில் இறங்கியுள்ள விருதுநகர் பாஜகவினர் இந்த திட்டத்தை செயல்படுத்தி தமிழக மக்களுக்கு மத்திய அரசின் பலனை கொண்டுவருவதில் உறுதியாக இருப்பது அவரின் செயல்பாடுகள் மூலம் உறுதியாகி இருக்கிறது.