தமிழக ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்த நிலையில் ஆளுநர் சந்திப்புகளை மையப்படுத்தி விவாதங்கள் எழுந்தது , இந்நிலையில் கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவில்களை அனைத்துநாட்களிலும் திறக்க வேண்டும் இல்லை என்றால் 10 நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு செல்வோம் ஸ்தம்பிக்க வைப்போம் என தெரிவித்தார் .
இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மத்திய அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில்தான் கோவில் திறக்கவில்லை எனவும் மத்திய அரசு அனுமதி அளித்தால் திறப்போம் எனவும் தெரிவித்தார் ,இந்த சூழலில் ஆளுநரை சந்தித்த அண்ணாமலை சட்டம் ஒழுங்கு விவகாரம் ,திமுக எம்.பி ரமேஷ் மீதான கொலை வழக்கு ஆகியவை குறித்தும் குறிப்பாக கோவில்களை திறக்காதது குறித்தும் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் முதல்வர் ஆளுநரை சந்தித்த பிறகு இன்று கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கலாம் எனவும் தங்கள் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு , இந்த சூழலில் ஆளுநர் சந்திப்பில் முதல்வர் கோவிலை திறக்க ஒத்துக்கொண்டார் என பல்வேறு தகவல்கள் வந்த நிலையில் , இன்று தனியார் தொலைக்காட்சியில் ஆளுநர் உடனான முதல்வர் சந்திப்பை மையப்படுத்தி விவாதம் நடந்தது .,
இதில் கலந்துகொண்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் தமிழகத்தில் பாஜகவிற்கு செல்வாக்கு இல்லை என்றாலும் தங்கள் மத்திய தலைமையால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தங்கள் ஆட்கள் என கருதி ஆளுநர் மூலமாக காரியத்தை சாதிக்க பார்க்கிறார்கள் என பேசினார் .உடனே குறுக்கிட்ட நெறியாளர் கலைச்செல்வி ஆளுநர் சொன்னால் முதல்வர் கேட்கிறாரா என கேட்க உடனே ரூட்டை மாற்றிய அருணன் அங்குதான் நான் கவனமாக வார்த்தையை பயன்படுத்துறேன் பாஜகவினர் நினைக்கிறார்கள் என அப்படியே ரூட்டை மாற்றினார் .
மேலும் தமிழகத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என அருணன் சொல்ல ஆக சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என சொல்கிறீர்கள் என சொல்லி நெறியாளர் கலைச்செல்வி சிரித்த சிரிப்பு அருணனுக்கு கொடுத்த மறைமுக கிண்டலாகத்தான் பார்க்கப்படுகிறது . இதற்கிடையில் ஆளும்கட்சியை சேர்ந்த திமுக எம்பி மீது கொலைவழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் ,.
அவரை சிறையில் அடைத்த நிலையிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என அருணன் கூறியதை கிண்டல் செய்து நெட்டிசன்கள் என்னென்ன கம்பிக்கட்டுர கதையெல்லாம் சொல்றார் பாரு அதான் நெறியாளரே சிரித்துவிட்டார் என கிண்டல் அடித்து வருகின்றனர் .