தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்ததும் அதன் பிறகு இன்று அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதன் பின்னணி தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது அதே நேரத்தில் சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழக முதல்வர் ஸ்டாலின் அக்டோபர் 11 ஆம் தேதி மாலையே ஆளுநரை சந்திக்கப் போவதாக முதலில் செய்திகள் கசிந்தன. முதல்வர் அலுவலகத்திலேயே அன்று ஆளுநர் சந்திப்பு இருப்பதாக வேறு சில அப்பாயின்மென்ட்களை தள்ளி வைத்தார்கள் என்ற. தகவல்கள் கிடைத்தன.
ஆனால் அன்று முதல்வர் ஆளுநரை சந்திக்கவில்லை. மாறாக மறுநாள் அக்டோபர் 12-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை உடன் சென்ற பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார் ஆளுநர். அதன் பிறகு அடுத்த நாளான அக்டோபர் 13 ஆம் தேதி முதலமைச்சரை சந்தித்திருக்கிறார். அக்டோபர் 11 ஆம் தேதி முதல்வர் -ஆளுநர் சந்திப்பு நடைபெறாமல் போனதற்கு வேறு சில காரணங்கள் இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுந்தன இந்த சூழலில் அதற்கான விடை கிடைத்துள்ளது.
அதேநேரம் 12 ஆம் தேதி தமிழக பாஜக டீம் ஆளுநரை சந்தித்து, திமுக எம்பி கடலூர் ரமேஷ் மீதான கொலை வழக்கு மற்ற சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவித்தது. இந்த நிலையில் மறுநாள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்கிறார் ஆளுநர். எனவே இந்த சந்திப்புக்கு ஆளுநரே அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும் ஆளுநர் தானாகவே முன் வந்து முதல்வரை அழைத்துப் பேசலாம். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்துகொள்ளலாம்.அதற்கு ஆளுநருக்கு முழு உரிமை உண்டு.
அவ்வாறு ஆளுநர் அழைக்கும்போது முதல்வரும் சென்று அதுபற்றி விளக்குவதற்கு கடமைப்பட்டவர்தான் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில் என்ன நடந்தது என்ற தகவல் கிடைத்துள்ளது, முதல்வரை வரவேற்ற ஆளுநர் அவருடன் வந்திருந்த மூத்த அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் ஆகியோரை வரவேற்றார்.
தலைமை செயலாளரிடம் முன்பே ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, சுகாதார முன்னேற்பாடுகள், கொரோனா தொற்றின் தற்போதைய நிலை ஆகியவை குறித்த தகவலை கேட்டிருக்கிறார்கள், அதோடு மாநில அரசு பள்ளிகள், தியேட்டர்கள், டாஸ்மாக் போன்றவை திறக்க அனுமதி அளித்தது எதன் அடிப்படையில் என்ற விவரமும் கேட்கப்பட்டு இருக்கிறது.
அதனை கொடுத்துள்ளனர், முதலில் இருவரும் நலம் விசாரித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த நீட் தேர்வு ரத்து ஏன் என்ற காரணத்தை சொல்ல ஆளுநர் கேட்டு இருக்கிறார், உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் ஆகிர்வற்றுடன் ஆலோசனை செய்தே என்னால் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவி செய்யமுடியும் என தெரிவித்து இருக்கிறார் ஆளுநர்.
அதன் பிறகு நேற்று தமிழகத்தில் கோவை, சிவகங்கை ஆகிய இடங்களிலும் நாடு முழுவதும் 23 இடங்களில் நடந்த NIA சோதனை குறித்து முதல்வரிடம் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆளுநர் அதன் பிறகு நேராக விஷயத்திற்கு வந்துள்ளார் ஏன் கோவில்கள் மூடப்பட்டு இருகின்றன. என கேட்க தமிழக முதல்வர் தரப்பில் தலைமை செயலாளர் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால் நேற்றைய தினமே ஆளுநரை சந்தித்த அண்ணாமலை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக 5% உள் தொற்று குறைவாக இருந்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என இருக்கிறது ஆனால் தமிழக அரசு சார்பில் பேசும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தவறாக திசை திருப்புகிறார் என தெளிவாக சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்.
இதையடுத்து சினிமா தியேட்டர், மால் போன்றவை திறக்கும் போது கோவில் திறக்காமல் இருப்பது வீண் சட்ட மோதலுக்கு வழிவகுக்கும் நாளையை தினமே பண்டிகைகள் தொடங்குகின்றன இன்னும் 20 நாட்களில் தீபாவளி பண்டிகை வருகிறது எனவே கோவில் உட்பட அனைத்து வழிபாட்டு தளங்களையும் அனைத்து நாட்களிலும் திறப்பதுதான் சரியாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.
முதல்வரும் உடனடியாக ஆளுநரின் ஆலோசனைக்கு சரி என தெரிவித்து இருக்கிறார், இந்த சூழலில்தான் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை செயல்படுத்திய அறிவிப்பை வெளியிட்டுவிட்டு கோவில்கள் அனைத்து நாட்களிலும் திறக்கலாம் என அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. வழிபாட்டு தளங்களை மட்டும் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டால் அண்ணாமலையின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படும் என நினைத்து கடற்கரை பூங்க என பலவற்றையும் திறக்கலாம் என பொதுவாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ 10 நாட்களில் கோவில் திறக்கப்படும் என அண்ணாமலை தீர்க்கமாக தெரிவித்தார் அப்போது மத்திய அரசிடம் அனுமதி வாங்கி வந்தால் திறக்கிறோம் என வீர வசனம் பேசினார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆனால் இன்று மத்திய அரசிடம் இருந்து அனுமதி கடிதம் பெறாமலே கோவில்கள் திறக்க பட்டது 100% பாஜகவிற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
நாகலாந்து மாநில ஆளுநராக இருந்த RN .ரவியை தமிழக ஆளுநராக அனுப்பிவைத்த பிரதமர் தற்போது தமிழகத்தில் இருந்து பிரதமர் அலுவலக செயலராக பணியாற்றிவந்த அமுதா IAS -ஐ மீண்டும்தமிழ்நாட்டின் மாநில பணிக்கே அனுப்பி வைத்துள்ளார் அது குறித்த முழுமையான தகவல்கள் அடுத்த TNNEWS 24AIR பக்கத்தில் விளக்கமாக வெளியிடப்படும் .