இன்டர்நெட் மற்றும் மிக விரைவாக இயங்கும் உலகத்தில் அனைத்துமே வேகமாக நடக்க வேண்டும் வேகமாக கிடைக்க வேண்டும் என பலர் பல வேலைகளை செய்கின்றனர் சமீபத்தில் கூட தொழிலதிபர்களை குறி வைத்து ஒரு பெண்ணும் ஆண்கள் சிலர் ஒன்று சேர்ந்து பேஸ்புக்கில் நட்புறவாக பழகுவது போன்று உறவை ஏற்படுத்திக் கொண்டு பிறகு அந்த தொழிலதிபரை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் இணக்கமாக இருந்து பிறகு அவர் இருக்கும் பொழுதே அப்பெண்ணின் ஆண் நண்பர்கள் கூட்டம் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து தொழிலதிபரிடம் இருக்கும் பணம் நகை செல்போன் என அனைத்தையும் பறித்து அக்கவுண்டில் இருக்கும் பணத்தை otp மூலம் தங்களது அக்கவுண்டிற்கு மாற்றிக்கொண்டு பிறகு அவரை கடத்திச் சென்று பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இச்செய்தி வெளிவந்த போது ஒட்டுமொத்த தொழிலதிபர்களும் அதிர்ச்சி அடைந்ததோடு இந்த விவகாரம் பெருமளவிலும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி ஸ்பா மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்தது. ஸ்பாவிற்கு வரும் பெண்களை தகாத உறவில் ஈடுபடுத்தி அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கும் மிரட்டி ஈடுபடுத்தி வந்த செய்தியும் வெளியானது. மேலும் சமீபத்தில் சென்னையில் செயல்பட்டு வந்த ஒரு உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வரும் ஆண் மற்றும் பெண் தோழர்கள் உடற்பயிற்சிக்கு எடையை குறைக்க வரும் பெண்ணிடம் உறவை ஏற்படுத்திக் கொண்டு பிறகு அவர்களிடம் நெருக்கமாக இருந்து அந்த புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறித்தது.
இப்படி எத்தனை தான் வரிசையாக மிகவும் விரைவாக பணத்தைப் பெற முடியும் என தேடி தேடி செய்து வருகின்றனர் அப்படிப்பட்ட சம்பவங்களும் செய்திகளில் வெளியாகி தமிழக மக்களை தொடர்ந்து அதிர்ச்சியிலே இருக்க வைக்கிறது. இந்த நிலையில் இதே போன்ற ஒரு மற்றுமொரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது ஆனால் இச்சம்பவத்தின் எதிரொலிகள் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் ஆன்லைனில் டேட்டிங் ஆப்பில் அழகான பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு ஹைதராபாத்தை சேர்ந்த சில தொழில் அதிபர்களிடம் பேசி அவர்களை ஹைதராபாத் மாதப்பூரில் உள்ள மோச் பப்பிற்கு அழைத்துள்ளனர். அந்த தொழிலதிபர்களும் அந்த பப்பிற்கு வந்தவுடன் சில பெண்கள் மூலம் அவர்களுக்கு மதுக்களை வழங்கியுள்ளனர் மதுக்களை வழங்கியபோதும் பெண்கள் குறித்து அந்த தொழிலதிபர்கள் அங்கு இருப்பவர்களிடம் கேட்பதை வீடியோவாக எடுத்து அந்த தொழிலதிபர்களிடமே போட்டு காண்பித்து மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர் இது குறித்த புகாரை மாதப்பூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். இதனை அடுத்து அவரது புகாரை ஏற்றுக்கொண்ட மாதப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் மோஜ் பப்பிற்கு சென்று ரெய்டு நடத்தி ஏழு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கும்பலில் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அனைத்தும் சமூக வலைதளமாக மாறி டேட்டிங் செய்வதற்கும் இதுபோன்ற ஆப்கள் பயன்படுத்தப்பட்டு அதனை தவறாக பயன்படுத்தி சில பண வசதி படைத்தவர்களை அழைத்து இதுபோன்ற பெரும் மோசடிகள் பெருகிக்கொண்டே வருகிறது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றாலும் இதற்கு முன்பாகவே தமிழகத்திலும் இதே போன்ற மற்ற சில சம்பவங்களும் நடந்துள்ளதால் இச்செய்தி தொழிலதிபர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.