24 special

விஜய்யை தொடர்ந்து சூர்யாவிற்கு துளிர் விட்ட அந்த ஆசை.... அடுத்த கட்டமாக இறங்கினார்...

vijay and surya
vijay and surya

தமிழ் சினிமாவும் அரசியலும் என்றுமே பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது ஆரம்பத்தில் எம்ஜிஆர் தொடங்கி வைத்த இந்த பயணம் ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் உதயநிதியென தொடர்ச்சியாக சினிமா கலந்த அரசியல் பயணம் நீடித்துக் கொண்டே வருகிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் பயோ பிக் படங்களை எடுத்து பார்க்கும் பொழுது கூட இருவருமே ஆரம்பத்தில் அரசியலில் நுழைய போவதில்லை என்று கூறியிருப்பதை நம்மால் பார்க்க முடியும். ஆனால் அவர்களே பிறகு அரசியலில் இறங்கி ஒட்டுமொத்த தமிழகத்தையே ஆண்டிருக்கிறார்கள். இவரைத் தொடர்ந்து தற்போது அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் ஆரம்ப காலத்தில் அரசியல் என்ற பெயரை கூறினாலும் அரசியலில் நான் இறங்கப் போவதே இல்லை என பல பேட்டிகளில் வெளிப்படையாகவே கூறியிருப்பார் ஆனால் தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். இவர்களைப் போன்று தமிழ் சினிமாவை சேர்ந்த மற்ற சில நடிகையின் நடிகர்களும் தற்போது அரசியலில் இயங்கி வருகின்றனர். 


நடிகர்களைப் போன்று பல நடிகைகளும் தமிழக அரசியல் பக்கங்களில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் சமீபத்தில் இணைந்தது நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜய்யும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற கருத்தையே கூறி வந்தார். ஆனால் கடந்த வருடங்களில் இவர் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் அரசியலில் மிக முக்கிய கவனம் பெற்றது. அதனை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும் இதற்குப் பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் ஒப்பந்தமாகியுள்ள படங்களில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழுமா அல்லது இதேநிலைத் தொடருமா மாற்றம் எந்த மாற்றமாக இருக்கும் என பல கேள்விகள் தற்போதிலிருந்தே அரசியல் வட்டாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் அரசியலில் இறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது அகரம் என்று அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவிகளை படிக்க வைத்து வரும் சூர்யா தனது ரசிகர் மன்றத்தின் சார்பிலும் பல உதவிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி மாவட்டம் தோறும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அவ்வப்போது சந்தித்து ரசிகர் மன்ற நடவடிக்கைகள் குறித்த தகவல்களில் பெற்று வருகிறார். அப்படி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஒருமுறை சூர்யா ஆலோசனை நடத்திய பொழுது, விஜய் தங்கள் ரசிகர்களை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது போன்று தாங்களும் தங்கள் ரசிகர் மன்றத்தினரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சூர்யாவிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக நமது இயக்கத்தை கிராமப்புறங்களில் வலுப்படுத்த வேண்டும் அதற்காக வருகின்ற ஊராட்சி மன்ற தேர்தலில் நமது நிர்வாகிகளை களம் இறக்க வேண்டும், அதற்காக தாங்கள் அனுமதிக்க வேண்டும் என சூர்யாவிடம் ஒரு நிர்வாகி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,  இதற்காக நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றெல்லாம் கட்டாயம் இல்லை, உங்கள் புகைப்படத்தை பயன்படுத்தி தேர்தலின் நிற்பதற்கு மட்டும் அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். தனது நிர்வாகியின் இந்த கோரிக்கையை நெருங்கிய வட்டாரங்களிடம் கூறி ஆலோசித்த சூர்யா தன் ரசிகர் மன்றத்தினர் தன் புகைப்படத்தை பயன்படுத்தி தேர்தல் போட்டியிட அனுமதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே அரசியல் ஆசை என்பது யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பது சூர்யா மூலம் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது.