Cinema

சூரிய வம்சத்தில் குழந்தையாக நடித்தவர் இவரா?? இணையத்தில் பரவும் வீடியோ!!

ACTOR HEMALADHA
ACTOR HEMALADHA

80's மற்றும் 90'ஸ்களில் நடித்த ஹீரோக்கள் இன்றளவிலும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஆனால் அப்போது நடிகையாகவோ அல்லது ஏதாவது ஒரு சைட் ரோலிலோ நடித்த பலரும் இன்று காணாமல் போய் விட்டனர். ஒரு சில நடிகைகளே தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இன்று அளவிலும் மக்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சினிமா துறையில் வலம் வந்து கொண்டு உள்ளனர். ஆனால் பலரும் எங்கே போனார்கள் என்ன ஆனது என்று கூட தெரியாத அளவிற்கு சினிமாவை விட்டு விலகியே இருக்கின்றனர். சிலருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட அவர்கள் வாழ்வில் திருமணம் குழந்தைகள் என்று ஆன பிறகு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் விலகி விடுகின்றனர். 


ஆனால் சிலர் திருமணம் ஆனாலும் கூட தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவர்களின் வேலைகளை தக்க வைத்துக் கொள்கின்றனர். மேலும் சில திருமணம் ஆகி கொஞ்ச வருடங்கள் பிரேக் எடுத்துவிட்டு அதன் பிறகு திரும்பியும் கம் பேக் கொடுக்கின்றனர். மேலும் சினிமாவில் முதலில் ஹீரோயினாக நடித்தவர்கள் இன்று  பல தொலைக்காட்சி சீரியல்களில் அம்மாவாகவும், பாட்டியாகவும் சைடு ரோல்களில் நடித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தற்போது தமிழில் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தில்  நடித்த ஒருவர் தற்போது வளர்ந்து அந்த திரைப்படத்தில் அவர்தான் என்றது போல வீடியோ ஒன்றினை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்!! அவர் யார்?? மற்றும் அவர் நடித்த திரைப்படம் என்ன?? என்பது குறித்து விரிவாக காணலாம்!!

பல திரைப்படங்களில் சைடு ரோல்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்ற ஒரு நடிகை தான் ஹேமலதா!! இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அதில் முக்கியமாக சித்தி, கனா காணும் காலங்கள் கொண்ட சீரியல்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஆனால் அதற்கு முன்பாகவே குழந்தை நட்சத்திரமாக சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சத்தில்  நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவருக்கு சக்திவேல் என்ற பெயரில் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் சினிமா உலகில் ஒரு வெற்றி பெற்ற திரைப்படமாகவும் இன்றளவும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் திரைப்படமாகவும் இருந்து வருவது சூரிய வம்சம்.

அத்தகைய திரைப்படத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். அதில் மகன் சரத்குமார் அவருக்கும் தேவயானிக்கும் பிறக்கும் மகன் தான் இந்த சக்திவேல். இந்த கேரக்டரில் தான் ஹேமலதா நடித்திருந்தார். அதில் அவரின் நடிப்பு சூப்பராக அமைந்திருந்த காரணத்தினால் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு மூன்று முடிச்சு என்னும் சீரியலில் நடித்து அதன் பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பத்தை கவனிக்க சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சித்தி, கனா காணும் காலம் போன்ற பல சீரியல்களில் வாய்ப்பு கிடைத்து தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் அதன் பிறகு சிறிது காலங்களில் திரைப்படங்களில் நடிக்காமல் பிரேக் விட்டிருந்தார்.

நிலையில் தற்பொழுது தனது இணையதள பக்கத்தில் தொலைக்காட்சியில் சூரிய வம்சம் படம் ஓடிக்கொண்டு இருக்க, அதில் இவர் வரும் காட்சி வரும் சமயத்தில் தொலைக்காட்சி பக்கத்தில் நின்று அதில் வருவது நான் தான் என்று கூறும் வகையில் ஆக்சன் ஒன்றை செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை யார் என்று தெரியாமல் இருந்தவர்கள் கூட ஓ இந்த திரைப்படத்தில் வருவது இவர்தானா என்றும், சிரிப்பு மட்டும் அப்படியே இருக்கு என்று கூறி வீடியோவை பதிவு செய்தும்  வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.