24 special

பிரதமர் மோடிக்கு எதிரான வேலை சுற்றி வளைத்த டெல்லி போலீஸ்...!

Modi
Modi

நரேந்திர மோடிக்கு எதிராக சுவரொட்டிகளில் ஒட்டப்படிருந்த போஸ்டர்களில் தொடர்புடைய 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்திருக்கின்றன.


2024-இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து ஆம் ஆத்மி கட்சியினர், டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளில், சுவரொட்டிகள் மூலம்  “மோடியை அகற்று, நாட்டை காப்பாற்று” என்ற வசனமுடைய ஆயிரக்கணக்கான போஸ்டர்களை ஒட்டிவந்ததாக 100 -க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்களை டெல்லி போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பத்திரிக்கை அச்சகம் வைத்திருந்ததும், போலீஸார் விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும் டெல்லியில் சுவரொட்டிகளில் ஒட்டப்படிருந்த 2,000 போஸ்டர்களை நேற்று டெல்லி போலீஸார் அகற்றினார்கள். அதேபோல் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், பத்திரிக்கை அச்சகத்தின் பெயரை குறிப்பிடாமல் சுவரொட்டிகளில் ஒட்ட வேண்டும் என்ற சட்டத்தின் கீழும், இவர்களை கைது செய்துள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் 138 எஃப்ஐஆர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 36 எஃப்ஐஆர்கள் மோடிக்கு எதிரான போஸ்டர்களுக்காக பதிவு செய்யப்பட்டது என்று டெல்லி போலீஸார் கூறினார்கள்.இதனைதொடர்ந்து, டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் ஒரு வேனை மறித்து போலீஸார் சோதனையிட்டதில், அதில் 2,000 போஸ்டர்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போஸ்டர்கள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு ஒப்படைக்க சொன்னதாகவும், மேலும் 50,000 போஸ்டர்கள் அச்சிட்டு வருவதாகவும் கைதான ஓட்டுநர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து “ஆம் ஆத்மி கட்சி இன்று டிவிட்டரில், 100-க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்களை போடும் அளவிற்கு இந்த போஸ்டர்களில் என்ன ஆட்சேபனை உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது நரேந்திர மோடியின் சர்வாதிகாரத்தின் உச்சத்தை காட்டுகிறது”. “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளது. மேலும்  “ஒரு போஸ்டருக்காக பிரதமர் மோடி ஏன் இப்படி பயப்படுகிறார்?” என ஆம் ஆத்மி டிவிட்டர் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளது.

“பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்வதற்கு ஆம் ஆத்மிக்கு துணிச்சல் இல்லை. சுவரொட்டிகளில் போஸ்டர்கள் ஒட்டும்போது அவர்கள் சட்டத்தை மீறியுள்ளதாக டெல்லியின் பாஜக செய்தி தொடர்பாளர் ஹரிஷ் குரானா கூறினார்”.

இந்நிலையில்,  ‘இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து பிரதமர் நரேந்திர மோடியை பதவி விலக வலியிறுத்தி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்தபோவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது’.