24 special

இந்த 10 தொகுதிகளில் நிச்சயம் பாஜக வெல்லும்..டெல்லிக்கு அண்ணாமலை சொன்ன தகவல் என்ன?

Modi ,annamalai
Modi ,annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவை திமுகவிற்கு மாற்று சக்தியாக உருவாக்க பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார், பாஜக வளர வேண்டும் என்றால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பதே சரியாக இருக்கும் என பேசியும் இருக்கிறார்.


இந்த சூழலில் அண்ணாமலை பாஜக தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்டால் 10 இடங்களில் பாஜக நிச்சயம் வெற்றி பெரும் என அடித்து கூறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது, இது குறித்து அண்ணாமலை டெல்லிக்கு அனுப்பியதாக கூறப்படும் தகவல் என்னவென்றால்,

2019-ல் பா.ஜக வுக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே பழனிசாமி ஒதுக்கினார். தினகரன் தனிக் கட்சி துவங்கியதால் அ.தி.மு.க. ஓட்டுகள் பிரியும் என தெரிந்தும் நான்கு தொகுதிகளை தென் மாவட்டங்களிலேயே ஒதுக்கினார். வரும் லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்கும்.

வேண்டுமானால் ஒரு தொகுதியை மாற்றித் தருவார். நெருக்கடி தந்தால் ஏ.சி.சண்முகமும் பாரிவேந்தரும் தாமரை சின்னத்தில் நிற்க சம்மதிப்பார். இதற்கு மேல் அ.தி.மு.க.விடம் எதுவும் கிடைக்காது என்பதை தேசிய தலைமையிடம் அண்ணாமலை தெளிவாக கூறி விட்டார்.

2014-ல் பா.ஜ.க அமைத்த மூன்றாவது அணிக்கு 19 சதவீத ஓட்டுகளும் இரண்டு எம்.பி.க்களும் கிடைத்தனர். அதுபோல அ.தி.மு.க. இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் திட்டத்தை மேலிடத்திடம் அண்ணாமலை முன்வைத்துள்ளார் என்றும்,

பா.ம.க., பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி அமைத்தால் தென் சென்னை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, சிதம்பரம் தொகுதிகளில் வெற்றி பெறலாம்.

நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, திருவள்ளூர், ஆரணி, துாத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மேலும் 10 தொகுதிகளில் தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம் என்றும், வலுவான வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு இணையாக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தினால் இதை சாதிக்கலாம் என அண்ணாமலை விளக்கமாக குறிப்பிட்டு இருக்கிறாராம்.

இது தமிழகத்தில் பா.ஜக ஆட்சி அமைப்பதற்கான அடித்தளமாக அமையும் என மார்ச் 10-ம் தேதி கிருஷ்ணகிரி வந்த தேசிய தலைவர் நட்டாவிடம் தனியாக பேசும்போது இதை அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

'பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாவிட்டால் அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். தி.மு.க. அரசு மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது.

'இதை பயன்படுத்த மூன்றாவது அணி அமைக்கலாம்' என அண்ணாமலை வலியுறுத்தி வருவதாகவும் 'கர்நாடக தேர்தல் முடிந்ததும் இது பற்றி பேசலாம்' என நட்டா தெரிவித்ததாகவும் பா.ஜ.வினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2014-ல் பா.ஜக அமைத்த மூன்றாவது அணிக்கு 19 சதவீத ஓட்டுகளும் இரண்டு எம்.பி.க்களும் கிடைத்தனர்.ஜெயலலிதா இருந்த போதே 19% வாக்குகளை பாஜக கூட்டணியால் பெற முடிந்த நிலையில் அதிமுக பலவீனம், ஆளும் கட்சியான திமுக அதிருப்தி போன்றவற்றை கருத்தில் கொண்டு சரியாக வியூகம் வகுத்து செயல்பட்டால் குறைந்தது 10 இடங்களை கூட்டணியுடன் பெற முடியும் என கணக்கு போட்டு டெல்லியிடம் பைல் ஒப்படைத்து இருக்கிறாராம் அண்ணாமலை.

பிரதமர் மோடி சென்னை வரும் அன்று பாஜகவின் அரசியல் கணக்கு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெளிவாக தெரிய தொடங்கும் என்கின்றன பாஜக வட்டாரங்கள். இது ஒருபுறம் என்றால் பாஜக தங்களுக்கு சுமை என இதுநாள் வரை தெரிவித்து வந்த அதிமுக நிர்வாகிகள் தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தனித்து தேர்தலை சந்திப்பதாக முடிவு எடுத்துவிட்டால் நிச்சயம் இரட்டை இலை முடங்கும், இரட்டை இலை முடங்கினால் எடப்பாடி பழனிசாமி பக்கம் யார் இருப்பார்கள், கூட்டணிக்கு யார் வருவார்கள் என தெரியாது, இன்னும் குறிப்பாக சொல்ல போனால் பாஜக 2024 தேர்தலில் திமுகவை வலுவாக எதிர்த்து இரண்டாவது இடத்தை பிடித்து விட்டால் எடப்பாடி பழனிசாமியின் பிம்பம் விழ தொடங்கும் இப்படிப்பட்ட சூழலில்தான் எப்படியாவது பாஜகவை தங்களுடன் வைத்து கொண்டு காரியம் சாதிக்க வேண்டும் என எடப்பாடி தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறாராம்.

எடப்பாடியின் நகர்வுகளை முன் கூட்டியே அறிந்து கொண்ட அண்ணாமலை சுதாரித்து கொண்டு டெல்லிக்கு தெளிவான பார்வையை அனுப்பி இருக்கிறாராம் இதன் மூலம் வரும் நாட்களில் பிரதமர் மோடியை வேட்பாளராக முன்னிறுத்தி வரும் நாட்களில் புது கூட்டணி தமிழகத்தில் அமையும் என அடித்து கூறுகின்றன கமலாலய வட்டாரங்கள்.