24 special

சுதந்திரம் கிடைத்தது இஸ்லாமியர்களாலா? வாயை விட்டு சிக்கிய செல்வபெருந்தகை... ஆதாரத்தோடு பொளந்து கட்டிய இந்துக்கள்..

selvaperunthagai
selvaperunthagai

தமிழகத்தில் இந்து கோவில்கள் அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் கோவிலில்  அளிக்கும் உண்டியல் காணிக்கை மொத்தமும் தமிழக அரசுக்கு எடுத்து கொள்ளும். அதில் கோவில்களுக்கு மட்டுமல்ல தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் கோவில் பணத்தை பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால் இஸ்லாமியர் சொத்துக்களை அரசு கண்டுகொள்ளாது மதசார்பற்ற அரசாங்கம் என கூறும் தமிழக வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்துக்கள் என்றால் ஒரு நியாயம் மற்ற மதங்கள் என்றால் ஒரு நியாமாமா என்ற கேள்விகள் எழ தொடங்கியுள்ளது. 


குறிப்பாக திமுக அமைச்சர்கள் ஆ.ராசா முதல் பொன்முடி வரை பல அமைச்சர்கள்  இந்து மதத்தை குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏன் தமிழக முதல்வர் ஸ்டாலின்  திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை.

பா. ஜ.க ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ.க அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. 

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கடந்த ஏப்ரல் 18 அன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடைபெற்ற வஃக்ப் வாரிய சட்ட திருத்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது இஸ்லாமியர்களால் என்ற கருத்தில் பேசியுள்ளார். இதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது. 

செல்வபெருந்தகை இந்திய வரலாறு படித்தாரா? மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு அவருக்கு தெரியுமா? என்ற சந்தேகம் எழுகிறது. சுதந்திர பிரகடனம் வெளியிட்டு சுதந்திரத்திற்கு போராடிய மருது சகோதரர்கள், பூலித்தேவன் போன்றோரை காட்டி கொடுத்தது யார் என்பதை செல்வபெருந்தகை போன்றோர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் இந்திய விடுதலைக்கு போராடினார்களா? அல்லது அகண்ட பாரதத்தை வெட்டி பிளந்து கிழக்கு & மேற்கு பாகிஸ்தான் உருவாக போராடினார்களா என்பதை மக்கள் மிக நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள்.

வரலாற்றை திரிக்கும் நயவஞ்சகத்தை காங்கிரஸ் இன்னும் கைவிடவில்லை என்பதையே செல்வபெருந்தகையின் இத்தகைய பேச்சு எடுத்துக் காட்டுகிறது. வரலாறு அறியாத செல்வபெருந்தகை போன்றோரின் பொறுப்பற்ற பேச்சுகள், எண்ணற்ற தியாகிகளின் தியாகம் புறக்கணிப்படுகிறது, மீண்டும் ஒரு பிரிவினையை தூண்டுவதாகவும் உள்ளது கடும் கண்டனத்துகுரியது, தேச பிரிவினையை முன்னெடுத்து அதற்கு ஆதரவளித்தது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். அதன் போராட்டத்தில் கலந்துகொண்டு வரலாற்றை திரித்து பேசுவது சுதந்திர போராட்டத்தை இழிவு செய்வதன்றி வேறில்லை. ஆகவே இனியாவது செல்வபெருந்தகை போன்றோர் வரலாற்றில் இருந்து பாடம் கற்று இஸ்லாமிய மதவாத அரசியலை ஊக்கப்படுத்துவதில் உள்ள ஆபத்தை உணர வேண்டும்.. என இந்து முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.