
தற்போது தமிழகத்தில் திமுகவுக்கு நெருக்கடியனா காலம் என்றே சொல்லலாம்.எந்த பக்கம் பார்த்தாலும் திமுகவுக்கு இடியை இறக்கி வருகிறது தமிழகத்தில் நடக்கும் அன்றாட பிரச்சனைகள். குறிப்பாக போதை கலாச்சாரம்.நடு ரோட்டில் நடக்கும் கொலைகள், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை என நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திமுகவுக்கு உள்ளேயேயும் புகைச்சல் ஆரம்பித்துள்ளது கனிமொழி காய்களை நகர்த்த துவங்கியுள்ளார். இது உதயநிதி தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கலைஞர் கருணாநிதியின் மகளும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், திமுக துணைப் பொதுச்செயலாருமான கனிமொழி எம்.பி, இனி தனக்கு டெல்லி அரசியல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அவர் தமிழக அரசியலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த திடீர் முடிவு ? கலைஞர் கருணாநிதியால் எம்.பியாக்கப்பட்டவர் கனிமொழி, அன்று முதல் இன்று வரை அவர் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவே செயல்பட்டு வருகிறார். அதனால், தமிழக அரசியலிலும் திமுகவிலும் தன்னுடைய செயல்பாடுகள் குறைவாக இருப்பதாக உணர்ந்ததன் காரணமாக டெல்லி அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, இனி தமிழகத்தின் கள அரசியலுக்குள் புக அவர் ரெடியாகி வருகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட கனிமொழி இப்போதே தயாராகி வருவதாகவும் அதற்கான பணிகளை அவர் துரிதப்படுத்தியிருப்பதாகவும் அவரது தரப்பினர் பேசிவருகின்றனர். தமிழக அரசியலில் தன்னுடைய ஆளுமை தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகவும் வரும் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் நிலையில், அமைச்சர் பதவியை பெறவும் அவர் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மு.க.அழகிரி திமுகவில் இருந்தபோது அவருக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற ஒரு புதிய பதவியை உருவாக்கி தென் மாவட்டங்களின் முகமாகவும் பவர்ஃபுல் நபராகவும் வைத்திருந்தார் கலைஞர். அதே மாதிரி, கனிமொழி ஆக நினைப்பதாகவும், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல் மதுரை, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் மாவட்டங்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் காய் நகர்த்தலில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்காகவே அவர் டெல்லி அரசியலை விடுத்து மாநில அரசியலுக்கு எண்டர் ஆக நினைப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திமுகவில் உதயநிதி அவர் கையே ஓங்கியுள்ளது. அதே மாதிரி தனக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதில் கனிமொழி இனி சமரசம் இல்லாமல் இருக்க வேண்டும் என அவரது தாயார் ராஜாத்தியம்மாள் கூறியுள்ளார். கட்சிக்காகவும் அப்பா கருணாநிதிக்காகவும் கனிமொழி பட்ட கஷ்டம் உதயநிதி படவில்லை ஆனால் கட்சியில் உதயநிதிக்கு பவரா என வெளிப்படையாக கேட்டுள்ளார். தென் மாவட்டங்களை கட்டுப்படுத்தும் பவர்ஃபுல் நபராக கருணாநிதி அழகிரியை வைத்திருந்தாரோ அதே மாதிரி, தென் மாவட்டத்தின் முகமாக, கனிமொழி இருக்க வேண்டும் என்று ராஜாத்தியம்மாள் ஆசைப்படுவதாகவும் அதை நிறைவேற்றவே கனிமொழி டெல்லி அரசியலுக்கு முழுக்கு போட நினைப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இது தொடர்பாக நீண்ட நாட்கள் காத்திருக்காமல், தனது தயார் மூலம் கோபாலபுரத்தில் அரசியல் குண்டை வீசியுள்ளார் கனிமொழி மேலும் தூத்துக்குடியா அல்லது நெல்லை மாவட்டத்தின் தொகுதியா என்பதை முடிவு எடுத்து பணிகளை வேகப்படுத்தலாம் என்பதில் அவர் உறுதியாக இருப்பதகவும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
திமுகவில் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதரவு பட்டாளம் இருக்கும் நிலையில், கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழிக்கும் தனி ஆதரவு பட்டாளம் உள்ளது. அவர்கள் கனிமொழி மூலம் வரும் 2026 தேர்தலில் எம்.எல்.ஏ சீட் பெற இப்போதே அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கனிமொழியே தமிழக அரசியலில் களமிறங்கும் நிலையில் அவருடைய ஆதரவாளர்களான தங்களுக்கும் இனி திமுகவில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என நம்பி, புதிய உற்சாகத்தில் அவர்கள் இருக்கின்றனர்.இதன் முதல் பசி தான் பொன்முடி விஷயத்தில் கனிமொழி செய்த விஷயம். இனி உதயநிதி அவரின் பவரை காட்ட நினைப்பார்.