Tamilnadu

நேற்று ஸ்டாலின் பேசிய நிலையில் இன்று விழுந்த ஆப்பு.. ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை புயல்! காட்டு தீயாக வைரல்!


தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு  சீரழிந்து வருகிறது என தொடர்க குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன திமுக அரசுக்கு எதிராக பேசப்படும் சமூக ஆர்வலர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றது அது மட்டும் இல்லாமல் கொலையும் செய்யப்படுகிறார்கள் இந்த நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர் அரசு அதிகாரிகளுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார்.மேலும் தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கீழே உள்ள பெண் விஇஓக்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றது. அரசு அதிகாரிகள் முதல் சாதாரண பெண்கள் வரை அனைவருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.  


அண்ணா பல்கலைக்கழகத்தில் திமுகவின் அனுதாபி ஞானசேகரன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது, மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான சென்னை கிளம்பாக்கத்தில் வேறு மாநில இளம் பெண்ணை ஆட்டோவில் பாலியல் வன்கொடுமை செய்தது கிருஷ்ணகிரியில் அரசு பள்ளியில் படித்த 13 வயது சிறுமியை அதே பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது வரை பல  குற்ற செயல்கள் தினம் வெளிவந்து கொண்டிருக்கின்றது ஆனால் தமிழக காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மௌனமாகவேஇருந்து வருகிறார். இதற்குக் காரணம் திமுகவின் அனுதாபிகள் இந்த பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டிருப்பதால் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களோ நாங்கள்  அவுட் ஆப் கண்ட்ரோல் என பெருமையாக சொல்லி வருகிறார்கள். இதற்கிடையே அண்ணாமலை ஒரு வீடியோ வெளியிட்டு திமுகவின் அவுட் ஆப் கண்ட்ரோல் நிலையை விமர்சித்துள்ளார். 

அவர் சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார் அதில் கூறியுள்ளதாவது : சென்னை வடபழனி ஆற்காடு சாலை அருகே, பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள்  மீது, விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரபாகர் ராஜாவின் அல்லக்கைகளான, 136-வது வட்ட திமுக பொருளாளர் கார்த்தி மற்றும் வினோத் ஆகிய நபர்கள், காவல்துறையினர் கண்முன்னே, கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கும் காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமிர் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?  

திருமதி. கனிமொழி அவர்கள் பங்கேற்ற விழாவில், பெண் காவலரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதும் இதே பிரபாகர் ராஜாவின் அடியாட்கள்தான். தொடர்ந்து, திரு. பிரபாகர் ராஜாவின் அல்லக்கைகளின் அராஜகம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. 

மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக ரவுடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குறைந்தபட்சம், இந்தப் பகுதிகளில், ‘திமுகவினர் உலவும் பகுதி, பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவும்’ என்ற எச்சரிக்கைப் பலகையாவது வைத்தால், பொதுமக்கள், தாங்களே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது. காவல்துறை, ஆவன செய்யவும். தற்போது இந்த வீடியோ காட்டு தீயாக பரவி வருகிறது.