24 special

பாஜகவினர் சொன்னது நடந்தே விட்டதா?

modu ,Khawaja Muhammad Asif
modu ,Khawaja Muhammad Asif

இனி வரும் காலங்களில் பாருங்கள் என்ன நடக்க போகிறது என பாஜகவினர் கூறினார்களோ அது தற்போது நடந்தே விட்டது, பிரதமர் மோடி இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மறு நொடி இந்தியாவில் பரபரப்பு உண்டானது அதே நேரத்தில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் புகைச்சல் உண்டானது.அப்போது பல பாஜகவினர் பொறுத்து இருந்து பாருங்கள்... விரைவில் பாகிஸ்தான் நாடே திவால் ஆகும் என பேசி வந்தனர் இன்று அது உண்மை என நிரூபணம் ஆகி இருக்கிறது.


பாகிஸ்தான் தேசம் எப்போதோ திவாலாகிவிட்டது’ என்று பகிரங்கமாக வேதனை தெரிவித்திருக்கிறார் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான க்வாஜா முகமது ஆசிப்.வரலாற்றில் இல்லாத அளவுக்கு அண்டை தேசமான பாகிஸ்தான் கடும் பொருளாதாரச் சீரழிவை எதிர்கொண்டுள்ளது. பணவீக்கம் காரணமாக விலைவாசி விண்ணை முட்டுகிறது. அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் அல்லாடுகிறார்கள். தேசத்தின் அந்நிய செல்வாணி இருப்பு வேகமாக கரைந்து வருகிறது. கையேந்தும் இடங்களில் எல்லாம் பாகிஸ்தான் நிராகரிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை, கடைசியாக பாகிஸ்தான் தஞ்சமடைந்துள்ளது. அதுவோ பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மேலும் பொத்தலிடும் நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனால், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கசந்து வருகிறார்கள். அந்த விரக்தியை எதிரொலிக்கும் வகையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரான க்வாஜா ஆசிப் பொதுநிகழ்வு ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

“பாகிஸ்தான் விரைவில் திவாலாகப்போகிறது என்று சொல்லி வருகிறார்கள். அது ஏற்கனவே நடந்து விட்டது. ஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தினர் என பல தரப்பினரின் நீண்டகாலத் தவறுகளால் பாகிஸ்தானில் இந்த தவறு நடந்திருக்கிறது. பாகிஸ்தானில் வளர்த்துவிடப்பட்ட பயங்கரவாதமும் அதன் பின்னணியிலான அரசியல் செல்வாக்கும் மற்றொரு காரணம்.

பொதுமக்கள் இனிமேல் சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடம் மன்றாடி பலனில்லை. பிரச்சினை பாகிஸ்தானில் இருக்கிறது. நாம்தான் நம்மை சரி செய்துகொள்ள வேண்டும்” என்று அவர் பேசியிருக்கிறார். நாடு மோசமான நிலைமைக்கு சென்று வருவதை அடுத்து, மக்கள் மத்தியில் கொதிப்பும் அதிகரித்து வருகிறது. அவற்றிலிருந்து தங்களையும், தாங்கள் சம்பாதித்தவற்றையும் காப்பாற்றிக்கொள்ள அரசியல்வாதிகள் பலரும் தன்னிலை விளக்கம் தந்து வருகின்றனர்.அந்த வகையில் ஆசிப்பின் பேச்சும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுக்களை ஒழித்தால் இந்தியா வளர்ச்சி அடைகிறது அதே நேரத்தில் பாகிஸ்தான் திவால் ஆகிறது என்றால் பின்னணியில் இருப்பது என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், இங்க அடித்தால் அங்க வலிக்குது என பாஜகவினர் மட்டுமின்றி பொதுமக்களும் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.