கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஆர் கே நகர் இடைத்தேர்தல் முதல் முறையாக பணம் பரிமாற்றம் போன்றவற்றை காரணம் காட்டி இடை தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். அது பல்வேறு அரசியல் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
இந்த சூழலில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக பரவி வரும் செய்தி திமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது எப்படியாவது காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறவைத்து அதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தடம் பதிக்கலாம் என நினைத்து இருந்த திமுகவிற்கு இடை தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக பரவிய தகவல் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
இடை தேர்தலுக்காக திமுகவின் மாநில அமைச்சரவை முழுவதையும் களத்தில் இறக்கி காங்கிரஸ் வேட்பாளருக்காக பணி செய்ய முதல்வர் ஸ்டாலின் அனுப்பி இருந்தார், தேர்தலுக்கான பணிகளில் 70% வேலைகளை திமுக அமைச்சர்கள் செய்து விட்டார்களாம்.
இந்த சூழலில் ஈரோடு இடை தேர்தல் களத்தில் பணம் மிக அதிக அளவில் கொடுக்கப்படுவதாகவும், வீட்டு வீட்டிற்கு சிக்கன், மட்டன் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான் தொடங்கி செல் போன் ரீசார்ச் என புது புது வழிகளில் வாக்கிற்கு லஞ்சம் செலுத்துவது போன்றவற்றை தெளிவாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் மூன்று அமைப்புகள் அனுப்பி இருக்கிறதாம்.
இதனை பார்வையிட்ட தேர்தல் ஆணையம் விரைவில் இடை தேர்தலை ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை சமூகவலைத்தளங்களில் பலரும் சூசகமாக பகிர மாநிலம் முழுவதும் இருந்து திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் நிர்வாகிகள் என குவிந்து இடை தேர்தல் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர் ஆனால் தற்போது இடை தேர்தல் ரத்து ஆனால் நிச்சயம் தற்போது செலவு செய்த பணம் ஒரு புறம் என்றால் மீண்டும் இடை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் இப்போதே மக்கள் அதிருப்தியை சமாளிக்க முடியவில்லை நாளை சமாளிக்க முடியுமா என வெளிப்படையாக புலம்புகின்றனர் உடன் பிறப்புகள்.
இது திமுகவினருக்கு கலக்கத்தை கொடுக்க மறுபுறம் அதிமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறதாம், இப்போது இருக்கும் சூழலில் தேர்தல் நடந்தால் அது காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது என்பதை தாண்டி அதிமுக வேட்பாளர் டெபாசிட் பெறுவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
மேலும் அதிமுக தலைவர் யார் என்ற கேள்வியும் இன்னமும் முடிவிற்கு வரவில்லை அதே நேரத்தில் இன்னும் 6 மாதம் கழித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் நடந்தால் அதில் நிச்சயம் அதிமுக வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருப்பதால் எப்படியாவது இடை தேர்தல் ரத்து ஆனால் நல்லதுதான் என்று இருக்கின்றனராம் அதிமுகவினர்.
அவற்றையெல்லாம் தாண்டி ஈரோடு கிழக்கு தொகுதி மக்களோ அட அடுத்த முறையும் இதே போல் இடை தேர்தல் வந்தால் டபுள் சந்தோசம் என்று இருக்கின்றனராம் மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என குழப்பத்தில் இருக்கின்றனராம் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்கள்.