24 special

இந்த வாட்டியும் இழுத்து விட்றாதம்மா...!மேயர் பிரியாவுக்கு போன அறிவாலய தகவல்....!

Mkstalin,mayor priya
Mkstalin,mayor priya

திமுக தரப்பில் அமைச்சர்கள் தான் பிரச்சனை கொடுத்துவருகிறார்கள் என்றால் மேயரும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை மேயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் சென்னையில் பெய்த மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கியது, பல வருடங்களுக்கு பிறகுஇது போன்ற மழை கோடை காலத்தில்பெய்துள்ளது என்று மக்கள் ஒவ்வொருவருமே ஆச்சரியத்தில் திளைத்தனர். இருப்பினும்சென்னை மக்களால் அன்றாட பணிகள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளுனர்கள்.  அந்தசமயத்தில் வெளிநாடு பயணம் சென்ற மேயர் பிரியா மழை வெள்ளம் அனைத்தும் முடிந்த பிறகு சென்னை திரும்பியது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் மேயராக பதவியேற்று இத்தனை மாதங்களாகியும் சில வார்த்தைகளை தவறாகஉச்சரித்து அந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டது. 


இதனைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்கடைசி படமான மாமன்னன் திரைப்படம் திரையரங்களில் வெளியானது அதனை தொடர்ந்து தான்சமையலுக்கு அத்தியாவசிய காய்கறியாக விளங்கும் தக்காளியின் விலை உச்சம் பெற்றது!இந்த நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் மாமன்னன் திரைப்படத்திற்காக கேள்வி எழுப்பிய போது மிகவும் சந்தோஷத்துடன்ஆரவாரமாக உதயநிதியை பாராட்டியதோடு மாமன்னன் திரைப்படத்தை பற்றி புகழ்ந்து தள்ளினார் மேயர் பிரியா, அதே சமயத்தில் தக்காளியின்விலை இவ்வளவு உயர்கிறது அதற்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைபற்றி கேட்ட பொழுது தக்காளியெல்லாம் எனக்கு தெரியாதுங்க ஸ்கூல் பத்தி கால்வாய் பத்தி என்கிட்ட கேளுங்க சொல்றேன் என்று அவர் மழுப்பியது திமுக தலைமையையே கோபப்படுத்தியது. 

இதனால்திமுக தலைமை மேயப்ரியாவை அழைத்து சற்று கடிந்து கொண்டதாகவும் அறிவாலய வட்டாரங்களில் பேசப்பட்டது. இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் மட்டுமே சிக்கிக் கொண்டால் அடுத்த முறை மேயராக வேண்டாமாஎன்று அறிவாலயம் அவரிடம் கூறியதோடு,  இன்னும்இரண்டு மாதத்தில் தொடங்க உள்ள மழைக்காலத்திற்கு முன்பாக சென்னையில் உள்ள குறிப்பாக மரக்கிளைகள்போன்றவற்றை சரி செய்யும் பணிகளில்ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என தெரிகிறது. 

நவம்பர் டிசம்பர் காலங்களில் சென்னையில் மழையானது அதிக அளவில் பெய்யும்இதனால் மக்கள் தங்களது அன்றாட செயல்களைக் கூட செய்ய முடியாமல்வீட்டில் முடங்கி இருக்கும் நிலையை ஏற்படும் அதனை தவிர்ப்பதற்காக பலமுன்னேற்பாடுகளை தற்போது இருந்து செய்ய வேண்டும் எனவும் மழையில் மரங்கள் விழுவதை தவிர்க்கவும்,  சாலையோரங்களில்நீர் வெளியேறி தேங்காமல் இருப்பதை தவிர்க்கவும் சில பணிகள் ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது அவை அனைத்தையும், ஒவ்வொருஏரியாவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை மேயர் பிரியாவிற்கு அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் இந்த மழைக்காலத்தில் சென்னையில் மழை நீர் தேங்கினால்எதிர்க்கட்சிகள் குறை சொல்வதற்கு ஒருநல்ல வாய்ப்பாக அமைந்து விடும் மக்கள் மத்தியில் ஏற்கனவே பல விவகாரங்கள் திமுகமீது அதிருப்தியில் இருப்பதால் மழைநீர் மட்டும் தேங்கினால் இன்னும் அதிருப்தி அதிகமாகும் ஆதலால் மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதெல்லாம் குறைச்சிகிட்டு செயலில் இறங்குங்க என மேயர் பிரியாராஜனுக்கு திமுக தலைமையிலிருந்து உத்தரவு பறந்த காரணத்தினால் தற்போது களத்தில் இறங்கி உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.