Tittle
2024 நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியை நோக்கி எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சினரும் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ,காங்கிரஸ் ,ஆம் ஆத்மி ,திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சியின் முக்கிய தலைவர்களான மு க ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ,சோனியா காந்தி ,மம்தா பானர்ஜி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல முக்கிய திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு கூட்டங்களிலும் பாஜகவை தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்கு பல்வேறு செயல் திட்டங்களை தீட்டி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் இந்தியா என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இடையே முரண்பாடுகள் தற்போது வெடிக்க அமைத்துள்ளன. டெல்லியில் மொத்தம் ஏழு மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றியை தழுவியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது இரண்டாவது இடத்தை பிடித்தது இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து இடங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இவ்வாறாக டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே போட்டி இருந்து வருகிறது.
பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளனர் இந்நிலையில் மூன்றாவது கூட்டத்திற்கு தேதி குறிப்பிடாத நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே எந்த தொகுதிகளில் யார் போட்டியிட வேண்டும்? எந்த கட்சி பெரிய கட்சி? என்ற சண்டை எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி நாங்கள்தான் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என தெரிவித்த நிலையில் அதற்கு எதிராக காங்கிரஸ் எங்களுக்கு தான் டெல்லியில் வாக்கு வங்கி அதிகம் எனவே நாங்கள் தான் போட்டியிடுவோம் என கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாராக இரண்டு கட்சியினரும் டெல்லியில் சரிக்கு சமமாக போட்டியிட்டு கொள்வதால் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளே பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பாஜக ,காங்கிரஸ் ம,ற்றும் ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே போட்டி நடந்து வரும் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டால் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள நிலையில் அவ்விரு கட்சிகளும் தொகுதியை பங்கிட்டு போட்டிடுவது பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.
மேலும் இதற்கு முன்னால் டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு அந்த வெற்றி கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு டெல்லியில் அதிகமாகியுள்ளது
இப்படி இரண்டு கூட்டங்கள் முடிந்து மூன்றாவது கூட்டம் தொடங்க உள்ள நிலையில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால் கூடிய சீக்கிரத்தில் இந்த கட்சி கூட்டணி உடைந்து விடும் என்று தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.