தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையல் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மீது தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுக வேட்பாளருக்கு எதிராக பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்தியது ஒரு பக்கம் என்றால், பொது மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர், ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஓட்டு கேட்டு திமுக mla செல்ல முடியாத நிலை இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையிலும் தொடர்கிறது.
கிராமங்களில் முறையாக சாலை அமைக்கவில்லை, பள்ளி குழைந்தைகள் செல்ல முறையான போக்கு வரத்து வசதி செய்து கொடுக்கவில்லை, நான் வெற்றி பெற்றால் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், கழிப்பறை என அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என கடந்த முறை வாக்கு கேட்டீர்கள், ஆனால் எதையுமே செய்யவில்லை என கிராம மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.
கிராமங்களில் இந்த நிலை என்றால் நகர பகுதிகளில், குடிநீர் பிரச்சனை, கழிவு நீர் பிரச்சனை, ராஜபாளையம் டவுன் முழுவதும் கடும் தூசி நிலவுவது என பல்வேறு புகார்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் எந்த அத்தியாவசிய தேவைகளையும் திமுக MLA செய்யாதது தொகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சாலை கடை வியாபாரிகள், வீதி கடைகள் நடத்துபவர்கள் என எந்த தரப்பும் உதவி கேட்டும் செய்யவில்லை, MLA தொகுதி நிதியை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒத்துக்குவதற்கு பதில் கட்சி நபர்களுக்கே ஒதுக்கிவிட்டார் இப்போது ஏன் பொதுமக்களை தேடி வருகிறார் என கொந்தளித்து பேசுகிறார் மணி என்ற ராஜபாளைய வாக்காளர்களில் ஒருவர்.
இப்படி தொகுதியில் வாக்கு கேட்டு செல்ல முடியாத சூழல் திமுகவிற்கு குறிப்பாக ராஜபாளைய திமுக வேட்பாளருக்கு எழுந்துள்ளது.