Politics

முழம் சோழன் கதை சொன்ன திமுக பிரசன்னா விரட்டி அடிப்பு அப்படியே மாறிய தமிழக மக்கள் !!!

முழம் சோழன் கதை சொன்ன திமுக பிரசன்னா விரட்டி அடிப்பு அப்படியே மாறிய தமிழக மக்கள் !!!
முழம் சோழன் கதை சொன்ன திமுக பிரசன்னா விரட்டி அடிப்பு அப்படியே மாறிய தமிழக மக்கள் !!!

நாளுக்கு நாள் அரசியலில் வளர்ப்பவர்களும் உண்டு, அரசியலில் தங்களுக்கு இருந்த இடத்தினை ஒரே நாளில் இழந்தவர்களும் உண்டு அந்த வகையில் தனக்கான இடத்தை இழந்து தற்போது தெரு முனை பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் திமுகவை சேர்ந்த பிரசன்னா


ஒரு காலத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு எதிர்கட்சிகளை விமர்சனம் செய்து ட்ரெண்ட் ஆனவர் பிரசன்னா, அதன் பிறகு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை ஒருமையில் பேசி சொந்த கட்சியினர் எதிர்ப்பை சந்தித்தார், மேலும் அழகிரி விவகாரத்தில் கருத்து சொன்னது, வீடியோ வெளியானது, ஆண்டாள் நாச்சியார் விவகாரத்தில் சர்ச்சையாக பேசியது என பிரசன்னா மீதான விமர்சனங்கள் அதிகம் கட்சி தலைமைக்கு சென்றது.

இதையடுத்து பிரசன்னா பெயர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒதுக்கபட்டது, இந்நிலையில் தான் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறார் பிரசன்னா ஆனால் திமுக தலைமையோ அவரது வேட்பு மனுவை நிராகரித்துள்ளது,இந்த நிலையில் தன்னுடன் சக அரசியல் வாதியாக பயணம் செய்த ஆளூர்ஷாநவாஸ் தேர்தலில் எம்எல் ஏ வேட்பாளராக போட்டியிடும் நிலைக்கு சென்றுவிட்டார்.

ஆனால் நாமோ இன்னும் தெருமுனை பிரச்சாரம் செய்ய வாகனத்தில் பேசவேண்டிய நிலையில் இருக்கிறோம் என புலம்பி வருகிறாராம்,  ஜான் பாண்டியணை எதிர்த்து எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பரந்தாமன்  ஜான் பாண்டியணை வென்று முழம் சோழன் ஆக வாழ்த்துக்கள் என வாழ்த்தினார் பிரசன்னா.

அதாவது ஜான் என்பதற்கு முழம் எனவும்  பாண்டியன் என்பதற்கு சோழன் எனவும் குறிப்பிட்டுள்ளாளாராம் இவர் இவ்வாறு பெருமை பேச சொந்த கட்சியை சேர்ந்த திமுகவினரோ அவரை பிரச்சாரத்திற்கு கூட அழைக்காமல் விரட்டி அடிக்கிறார்கள்... குறிப்பாக தென் மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பலர் பிரசன்னாவை பிரச்சாரத்திற்கு அனுப்ப வேண்டாம் என நேரடியாக தலைமையிடம் தெரிவிக்க இப்போது சென்னையில் மட்டும் முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளராம் பிரசன்னா.

பிரதமர் முதல் பலரை ஒருமையில் திட்டிய பிரசன்னா இப்போது சொந்த கட்சி சீட் கொடுக்காமல் விரட்டி அடிக்கும் நிலைக்கு சென்று இருப்பது தமிழகத்தில் வேட்பாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக இந்து அமைப்புகளின் வாக்குகள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்து கடவுள்களை விமர்சனம் செய்தால் திமுகவில் சீட் கொடுக்கப்படும் என்ற நிலை மாறி இப்போது இந்து கடவுள்களை விமர்சனம் செய்பவர்களுக்கு திமுகவில் சீட் இல்லை என்ற நிலை உண்டாகி இருப்பதற்கு தமிழக மக்களிடையே உண்டான மாற்றம்தான் காரணம் என கூறப்படுகிறது.