Politics

நட்சத்திர தொகுதியான ராஜபாளையம் தொகுதியில் நேற்று எடுக்கப்பட்ட கள நிலவரம் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

நட்சத்திர தொகுதியான ராஜபாளையம் தொகுதியில் நேற்று எடுக்கப்பட்ட கள நிலவரம் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
நட்சத்திர தொகுதியான ராஜபாளையம் தொகுதியில் நேற்று எடுக்கப்பட்ட கள நிலவரம் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, அதிமுகவினர் மஞ்சள் நிற ஆடைகளுடன் தொகுதி முழுவதும் வலம்வருகின்றனர், திமுகவினர் தங்கள் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில்  ஆளுக்கு ஒருபுறம் வீதி வீதியாக களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் வெற்றி பெற போவது ஒருவர்தான், அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது வாக்காளர்களான மக்கள் கையில் தான் உள்ளது, சரி வாக்களிக்க கூடிய மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என கொஞ்சம் அறியலாம் என பார்த்தால் பல்வேறு நபர்கள் தெரிவித்த கருத்துக்கள் நம்மை அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைய செய்துள்ளன.

இராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக சிட்டிங் எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், நான்  தொகுதிக்கு எனது சம்பள பணம் உட்பட அனைத்தையும் செலவு செய்து சொந்த செலவில் தொகுதிக்கு பணியாற்றி வருவதாக புத்தகம் அடித்து இராஜபாளையம் தொகுதி மக்களிடம் விநியோகித்துள்ளார் தங்கபாண்டியன்.

ஆனால் தொகுதி மக்கள் மனநிலையோ மணல் கொள்ளை நடத்தியது யார்?அங்கு ஓடிய வாகனங்கள் யாருடையது, ஆற்று மணலை குவாரி குத்தகை எடுத்து விற்ற பணம் எங்கே? என பல்வேறு துணை கேள்விகளை தங்கபாண்டியனை நோக்கி எழுப்புகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கடந்த 5 ஆண்டுகளாக இராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் தங்கபாண்டியன் குடிநீர் திட்டங்களை கொண்டுவரவில்லை என ராஜபாளையம் நகர் வாசிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

தெருக்கள் வாரியாக சிமெண்ட் சாலை அமைக்க தங்கபாண்டியனை பலமுறை சந்தித்து கோரிக்கை வைத்தும்... அதனை தங்கபாண்டியன் கண்டுகொள்வது கூட இல்லை என பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஓட்டும் ராஜபாளைய வாசி கொந்தளிக்கிறார். சரி நகருக்குள் தான் திமுகவிற்கு எதிர்ப்பு என்றால், கிராமம் பகுதிகளில் என்ன நடக்கிறது என சென்றால்....முகவூர், செட்டியார்பட்டி, தளவாய்புரம் பகுதிகளில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற பின்பு தொகுதி பக்கம் வரவே இல்லை எனவும்..

தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி.. உள்ளிட்ட எந்த பணியும் நடைபெறவில்லை எனவும் குற்றசாட்டுகள் தங்கபாண்டியன் மீது எழுகிறது..தனது எம்எல்ஏ தொகுதி நிதியில் இருந்து கூட எங்கள் பகுதிக்கு...சொல்லும்படி எந்த உதவியையும் தங்கபாண்டியன் செய்யவில்லை எனவும்....பொது கழிப்பறைகள் கட்டுவதாக வாக்குறுதி அளித்து அதையும் நிறைவேற்றவில்லை என்று தங்கபாண்டியன் மீது அடுக்கடுக்காக கிராம மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

திமுகவினரை தவிர்த்து தொகுதிக்குள் முழுமையாக சிட்டிங் எம்எல்ஏ மீதான எதிர்ப்பு குரல் வலுவாக தெரிகிறது அதே நேரத்தில் ராஜபாளையம் தொகுதி அதிமுகவிற்கு காலம் காலமாக ஆதரவாக இருந்து வருவதும், முக்கிய சமூகத்தை சேர்ந்த வாக்குகள் அதிமுகவிற்கு செல்வதும் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சாதகமான ஒன்று.

ராஜேந்திர பாலாஜி கிராமம் கிராமமாக சென்று ஊர் மக்கள் குறைகளை கேட்டு அறிவதும், நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் 50 நாட்களில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றுவேன் என தெரிவித்து வருவதுடன்.மேற்பர்வையாளராக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்து வருகிறார்.

அமைச்சராக இருக்கையில் ராஜேந்திர பாலாஜி செய்த செயல்பாடுகள் ஆகியவற்றை கணக்கிட்டு  இவர் வெற்றி பெற்றால், நமது தொகுதிக்கு நிச்சயம் நல பணிகளை செய்வார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே மேலோங்கி இருக்கிறது.

அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் தொகுதி முழுவதும் வலம் வருவதும்.. திமுகவினர் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள ரயில்வே நிலைய தெருக்களிலேயே முடங்கி இருப்பதற்கான காரணமே ராஜபாளையம் தொகுதியில் மக்கள் மனநிலை என்ன என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.