விளம்பரம் செய்வதாக அதிக பணம் செலவில் எடுத்த திமுக குறும்படம் ஒன்று ராஜபாளையத்தில் கடும் தோல்வியை கண்டுள்ளது, சிட்டிங் எம்எல்ஏ தங்கபாண்டியன் வேளை சரியில்லாத காரணத்தால் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்த தனி குழு ஒன்றை திமுக தலைமை ராஜபாளையத்திற்கு அனுப்பியுள்ளது.
அங்கு சென்ற நபர்கள் ரயில்வே மேம்பாலம் திமுக mla தான் கட்டி கொடுத்தார் என்ற ரீதியில் குறும்படம் ஒன்றை எடுத்து லோக்கல் வாட்ஸாப் குழுவிலும் பகிர்ந்து உள்ளனர், அங்குதான் வகையாக சிக்கியுள்ளனர் போக்கிரி படத்தில் மண்டை மேல் உள்ள கொண்டையை வடிவேல் மறந்தது போன்று ஒரு சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.
குறும்படத்தில் ராஜபாளையம் பொதுமக்கள் போன்று வேஷம் போட்ட நபர், திமுக உறுப்பினர் எனவும் அவர் வந்த இரு சக்கர வாகனத்தில் அவர் பெயரை பயன்படுத்தியதும் இப்போது ராஜபாளைய வட்டாரத்தில் நக்கல் நையாண்டியாக மாறியுள்ளது.
திருட. தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாக, திமுகவினரே பொது மக்கள் போன்று வேசம் போட்டு நாடகத்தை எடுத்தது தெரியவர ராஜபாளையம் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனராம், அட ஏதோ சிறுவர்கள் விளையாட்டு தனமாக செய்துவிட்டார்கள் என விட்டு விடலாம் என்றால்...., திமுக mla தங்கபாண்டியன் இவர்களை காட்டிலும் மோசமாக தனது கட்சியை தானே குறை கூறிவிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பலாம் பணி வரும் வரும் என ஒவ்வொரு நபர்களும் சொன்னார்களே தவிர யாரும் செய்யவில்லை என தெரிவித்தார், இதுதான் வேதனையின் உச்சம்.. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருக்கிறது, அதற்கு முன்னர் திமுக ஆட்சி இருந்தது என்பது கூட தெரியாமல் சொந்த கட்சியே எதுவும் செய்யவில்லை என உளறி தள்ளிவிட்டார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொண்டு வந்த திட்டத்தை தான் செய்தேன் என பொய் சொன்னாரே அதை தெளிவாக சொன்னாரா என ராஜபாளையத்தில் இளைஞர்கள் கலாய்த்து வருகின்றனர், நடிக்க ஆள் கிடைக்காமல் சொந்த கட்சி நபரையே நடிக்க வைத்த திமுக எம்எல்ஏ வின் நரி தந்திரம் இப்போது நாறிப்போய் சிரிப்பாய் சிரிக்கிறது.