Tamilnadu

இப்படி ஒரு "விடியலை" எதிர்பார்க்கவில்லை திமுகவிற்கு வாக்கு அளித்தவர் கொடுத்த அதிர்ச்சி!

Stallin
Stallin

கடந்த தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைய வேண்டும் என வாக்களித்து இப்போது நடு ரோட்டில் இருப்பதாக கொளத்தூர் தொகுதியை சேர்ந்தவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஐசிஎஃப் பகுதியில் இருந்து கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதிக்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் இறங்கும் பகுதி அவ்வை நகர் 1-வது சாலையில் அமைகிறது. அதனால், பாலம் அமையும்பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு திட்டமிட்டிருந்தது. இதையடுத்து, 57 வீடுகளை இடிக்கத் திட்டமிட்டு, 3 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. 


இந்நிலையில்,நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய், மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றி, வீடுகளை இடித்தனர்.இதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், தங்கள் வீடுகளில் உள்ள உடைமைகளை வெளியில் எடுக்க வேண்டியிருப்பதால், தங்களை விடுவிக்குமாறு போலீஸாரிடம் கைதானவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, "முதலில் 14 மீட்டர் அகலத்தில் இடம்பெற்றுள்ள வீடுகளின் பகுதிகள் மட்டும் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 10-ம் தேதி மின் இணைப்பைத் துண்டித்தனர். அடுத்த நாள் நீர்நிலையை ஆக்கிரமித்து இருக்கிறோம் என்று கூறி, வீடுகள் அனைத்தையும் அகற்றுவதாக நோட்டீஸ் ஒட்டினர். தற்போது திடீரென 100-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் வந்து, எங்களை வெளியேற்றி, வீடுகளை இடிக்கத் தொடங்கினர்.

இதனால் கடந்த 50ஆண்டுகளாக அங்கு குடியிருந்த மக்கள் கதறி அழுதனர்,ஸ்டாலின் பட்டா கிடைக்கும் என்று தானே வாக்கு கேட்டார் இப்போது வீடே இடித்து தரை மட்டம் ஆகிவிட்டது,இது குறித்து ஒரு ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என கொந்தளித்து இருக்கிறார் அவ்வை நகரை சேர்ந்தவர். இது குறித்து திமுக அரசை நோக்கி சரமாரியாக அவர் எழுப்பிய கேள்வி கீழே இணைக்கபட்டுள்ளது.