Cinema

மணமகளின் தோழிக்கு தாலி கட்டியதாக பரவும் வதந்தி உண்மை என்ன?

marriage photo
marriage photo

புதுப்பேட்டை பட பாணியில் தாலி கட்டியதாக வீடியோ ஒன்றை பிஹைண்ட்வுட்ஸ் வெளியிட அது வைரலானது பலரும் செய்தி உண்மையா பொய்யா என்பதை அறியாமல் தனியார் யூடுப் சேனல் வெளியிட்ட செய்தியை பகிர்ந்தனர் இந்த சூழலில் இது உண்மையல்ல சீரியல் காட்சி என்பது தெரியவந்துள்ளது.


தெலுங்கில் ஜீ தொலைக்காட்சியில் ” muthyamantha muddu ” எனும் பெயரில் ஒளிபரப்பு செய்யப்படும் நாடகத்திற்காக நடைபெற்ற ஷூட்டிங் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்து வெளியிட்டு உள்ளனர். அந்த காட்சி அடங்கிய வீடியோ இன்னும் தொடரில் வெளியாகவில்லை.

வைரலாகும் வீடியோ பிஹைண்ட்வுட்ஸ் குறிப்பிட்டது போன்று உண்மையில்  திருமணத்தில் நிகழ்ந்த சம்பவம் அல்ல, அது தொலைக்காட்சி சீரியலுக்காக நடைபெற்ற ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட காட்சியே ஆனால் எந்த உண்மையும் அறியாமல் வித விதமாக கதையை அளந்துவிட்டு இருக்கிறார்கள்.சமூக வலைத்தளத்தில் வெளியான காட்சியை ஒரு பெரும் நிறுவனம் ஒன்று எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் வெளியிட்டு இருப்பதே இத்தனை குழப்பத்திற்கும் காரணம். உண்மையான சீரியல் காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.