திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியின் மூத்த அரசியல்வாதியுமான துரைமுருகன் தற்போது நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். 2021 திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி திமுகவின் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்திக் கொடுத்தவரில் முக்கிய பங்காற்றியவர் துறைமுருகன்! பொது மேடையிலேயே திமுக நிர்வாகி ஒருவரை ஜாதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது , சமீபத்தில் கூட பொது மேடையில் பேசியது துரைமுருகன் பள்ளிகளில் கல்வியை இலவசமாக கொடுக்கிறோம் புத்தகமும் இலவசமாக கொடுக்கிறோம் மதிய உணவும் போடுகிறோம் இனி காலை உணவு போட போகிறோம் அதனால் உங்களுடைய வேலை எல்லாம் குழந்தையை பெற்றுக் கொடுப்பது மட்டும்தான் என்று மிகவும் கிண்டலாக துரைமுருகன் பேசியது பெருமளவில் சர்ச்சையானது. இந்த சர்ச்சைகளால் ஒருமுறை திமுகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் தினமும் காலை எழுந்தவுடன் நமது கட்சியின் நிர்வாகிகள் என்ன பிரச்சனை வைத்திருக்கிறார்கள் என்பதை சமாளிப்பதே எனக்கு பெரும் வேலையாக மாறுகிறது என்று கண்ணீர் விடாத குறைக்கு புலம்பினார்.
இருப்பினும் கருணாநிதியின் காலத்தில் இருந்து முக்கிய பதவியிலும் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகின்ற துறைமுருகன் திமுகவிற்கு நம்பிக்கை பாத்திரமாகவும் விளங்கி வருகிறார். ஆனால் இதனை பயன்படுத்திக் கொண்டு தனது மகன் கதிர் ஆனந்தை அரசியலில் நுழைத்து தற்போது எம்பி பொறுப்பிலும் அமர்த்திவிட்டார். இந்த நிலையில் துரைமுருகனின் உடல்நிலை குறித்த பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது போதை பொருள் கடத்தல், கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனை உண்டு பல உயிரிழப்புகள், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை போன்றவற்றால் பெருமளவில் பின்னடைவுகளை திமுக சந்தித்துள்ளது. இதனால் விக்கிரவாண்டி தேர்தலில் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? தேர்தலில் வெற்றி பெறுவோமா? அல்லது தோல்வியை தழுவுவோமா என திமுக மறைமுகமாக பல ஊழல் வேலைகளிலும் லஞ்ச வேலைகளிலும் ஈடுபட்டது ஓட்டுக்காக திமுக தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் செய்திகளில் வெளியானது.
இதனை அடுத்து விக்கிரவாண்டி இடை தேர்தலில் திமுக வெற்றியை பெற்றதை அடுத்து திமுகவின் இந்த வெற்றி ஊழலின் வெற்றி தான் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் ஆனால் அவற்றை பொருட்படுத்திக் கொள்ளாமல் தங்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தது திமுக. இதனிடையே விக்கிரவாண்டியின் இடை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை கொண்டாடி மு க ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்ல அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவாலயதிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது துரைமுருகனின் வயது மூப்பு காரணமாக ரத்த சக்கரை அளவு குறைபாடு ஏற்பட்டதால் திடீர் மயக்க நிலையை அவர் அடைந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பினார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆனால் தமிழக முதல்வர் எப்படி தனக்கு இருக்கும் பெரும் உடல் நல குறைவை மறைத்து வைத்துவிட்டு அதற்கான சிகிச்சைகளை மட்டும் ரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்று மேற்கொண்டு வருகிறாரோ அதேபோன்றுதான் துரைமுருகனுக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை வெளியில் கூறாமல் துரைமுருகன் தரப்பு வயது மூப்பால் ஏற்பட்ட மயக்கம் என செய்திகளில் தெரிவித்துள்ளது, இன்னும் சில நாட்களில் துரைமுருகனின் உடல் நிலையும் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரும் என நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.