24 special

போதுமா உன்னோட வேலை...மேயர் ப்ரியாவை புறக்கணித்த அறிவாலயம்!....

mayorpriya
mayorpriya

பள்ளிகள் தொடங்கப்பட்டாலே அடுத்தடுத்த மாதங்களில் மழைக்காலம் ஆரம்பித்து விடும் மழைக்காலம் என்றாலே பல இடங்களில் மழை நீர் தேக்கம் அதனால் பரவக்கூடிய நோய்கள் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தொடர் இருமல் சளி காய்ச்சல் போன்றவற்றால் அவதியுறுவது  அதிகமாகும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் இந்த மழைக்காலத்தை நாங்கள் கடந்தால்தான் அடுத்த வருடத்திற்கு இருப்போமா இருக்க மாட்டோமா என்பதே தெரியவரும் என பெருமளவிலான மன வேதனையில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை தூத்துக்குடி பகுதி மக்கள் உள்ளனர்.


ஏனென்றால் கடந்த வருடம் இதேபோன்று ஜூன் வந்தது ஜூலை வந்தது அதற்கு பிறகு மழைக்காலமும் வந்தது! அந்த மழை காலத்தில் ஒரு சொட்டு மழை நீர் கூட சென்னையில் தேங்காது என்று பெருமளவிலான வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக அரசு இலட்சணம் தெரியவந்தது. இதுவரை மழைநீர் தேங்காத பல இடங்களிலும் மழை நீர் தேங்கி வீட்டிற்குள் புகுந்து மக்கள் அவதியுற்றனர் அது மட்டும் இன்றி, மழை நீர் வீட்டிற்குள் புகுந்து சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கு கூட யாரும் வரவில்லை மீட்பு நடவடிக்கைகள் நடக்கவே இல்லை உணவுகளும் கிடைக்கவில்லை என மக்கள் திமுக மீது கொண்டிருந்த நம்பிக்கையில் விரக்தி அடைந்தனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கண்டன பதிவுகளை முன் வைத்தனர். மேலும் பல சினிமா பிரபலங்கள் மழையில் சிக்கி தவித்த செய்திகளும் வெளியானது. 

இந்த பகுதியை போன்று தான் தூத்துக்குடியிலும் பெருமளவில் மழை பெய்து ஏராளமான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாதிக்கப்பட்டனர். இப்படி மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில் இவற்றிற்கு திமுகவின் மொத்த கோபமும் சென்னை மேயர் பிரியா மீது திரும்பியது ஏனென்றால் மேயர் பிரியா தரப்பில் தான் சென்னை மாநகராட்சியில் மொத்த கட்டுப்பாடு உள்ளது. அதிலும் மழை வெள்ளத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் பொறுப்பு அவரிடம் தான் உள்ளது! ஆனால் மழை வருவதற்கு முன்பாக பல இடங்களில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் மழைநீர் வடிகால்களை அமைத்துள்ளோம் என பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வந்த மேயர் பிரியாவின் செயல்பாடுகள் மழை பெய்த பிறகு தான் தெரியவந்தது. இதனால் திமுக தலைமையும் பிரியா மீது கடும் கோபத்தில் இனி பத்திரிகையாளர்கள் சந்திப்பை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது! எந்த ஒரு திட்டத்திலும் தலைமை வகிக்க வேண்டாம் என்று கடுமையாக கண்டித்து உள்ளது. 

இதன் காரணமாகவே கடந்த வருட மழை வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு பெருமளவிலான திட்டங்களில் தலையிடாமலும் செய்தியாளர்கள் சந்திப்பையும் புறக்கணித்து வந்தார் மேயர் பிரியா! இந்த நிலையில் தற்போது மழை நீர் தேக்கத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளை அறிவாலய தலைமை அமைச்சர் சேகர் பாபுவிடம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் சில நடவடிக்கைகள் சென்னை முழுவதும் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி எம் டி ஏவின் கீழ் செயல்படுத்தப்படும் ஐந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல கிட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று கள ஆய்வு நடத்தியுள்ளார். 

ஏனென்றால் கடந்த முறை இந்த பணியை மேயர் பிரியாவிடம் கொடுத்து பெரும் பின்னடைவுகளை சந்தித்து விட்டோம். இந்த முறையும் அவரிடமே கொடுத்து ஏற்கனவே சரிந்துள்ள நமது வாக்கு சதவிகிதத்தை மேலும் குறைத்துக் கொள்ள கூடாது, இந்த வருடத்தை விட்டால் அடுத்து பொதுத் தேர்தல் தான் அந்த தேர்தலில் மக்கள் தங்கள் கோபத்தை காட்டி விடுவார்கள் என்பதற்காக தற்பொழுது இந்த பணிகளை சேகர்பாபுவிடம் கொடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது