Tamilnadu

அதுவும் உங்க "கூட்டாளிதான்" தெரியுமா? திருமாவை குருமாவாக்கிய நிர்மலா சீதராமன்! தமிழிலேயே வெளுத்து எடுத்த சம்பவம் !

nirmala sithraman reply to thirumavalavan
nirmala sithraman reply to thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம்  தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவனுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது, இது குறித்து பிரபல நாளிதழ் தினமலர் தெரிவித்த முக்கிய தகவல்களை பார்க்கலாம்.


குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் செப்டம்பரில் பறிமுதல் செய்தது. இந்த கடத்தல் தொடர்பாக நாடு முழுதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ஆப்கன், உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வி.சி.க., தலைவர் திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.நிதியமைச்சர் தனது பதிலுரையில் கூறியதாவது: முந்த்ரா துறைமுகத்தில் ஹெராயின் பிடிக்கப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரியும். இதில் உடனடியாக மூவர் கைது செய்யப்பட்டார்கள்.

சிறிய ஆட்கள் தான் பிடிப்பட்டுள்ளார்கள், பெரிய ஆட்களை பிடிக்கவில்லை என்கின்றனர். விசாரணைக்கு பிறகு தானே பிடிக்க முடியும். அதோடு இல்லாமல் நமக்கு பிடிக்காத தொழிலதிபரின் பெயரைப் போட்டு அவர்களது துறைமுகம் என்று சொல்வது நியாயமில்லை. அதே தொழிலதிபரை கேரளாவில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது துறைமுகம் கட்ட விரும்பி அழைத்தார்கள். அதுவும் டெண்டர் இல்லாமல்.

அங்கு ஆட்சியில் இருந்தது உங்கள் தோழமைக் கட்சி. அதைப் பற்றி கேள்வி கேட்கவில்லை. இப்போது முந்த்ராவில் அவர் துறைமுகம் நடத்துகிறார் என்றவுடன், தனியார் துறைமுகத்தில் ஹெராயின் வந்துள்ளது நாட்டுக்கே பெரிய ஆபத்து என்று பேசுவது நாட்டுக்கு நல்லதில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.நவம்பரில் டில்லி விமான நிலையத்திலும் ஹெராயின் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஏர்போர்ட் எந்த தொழிலதிபருக்கும் உரியது அல்ல. என கூறினார்.அப்போது இடைமறித்து பேசிய கேரளா காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி., என்.கே.பிரேமசந்திரன், மேடம் விழிஞ்சம் துறைமுகத்தை பற்றி கூறுகிறார் என புரிந்து கொள்கிறேன். குளோபல் டெண்டர் இல்லாமல் அவரை அழைத்ததாக கூறியுள்ளீர்கள்.

அதில் திருத்தம் தேவை. குளோபல் டெண்டரின் ஒரு பகுதியாக அவர் ஒருவர் மட்டுமே பங்கேற்றார். அதன்படி துறைமுகம் கட்ட அந்நிறுவனம் அழைக்கப்பட்டது. என்றார்.அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், தற்போதைய செயல்முறையில் டெண்டரில் ஒரு ஏலதாரர் மட்டும் பங்கேற்றால் அந்த டெண்டர் ரத்து செய்யப்படும் என்றார். அதற்கு பா.ஜ., எம்.பி.,க்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.அம்பானி அதானி என குற்றசாட்டு வைத்து பல்வேறு விஷயங்களை கிளப்பலாம் என நினைத்த திருமாவளவனுக்கு, நிர்மலா சீதராமன் கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.