தங்களை முற்போக்கு வாதிகள் என்று கூறி கொள்ளும் இயக்கங்களும் நபர்களும் மோடி அரசின் மிக பெரிய நடவடிக்கைக்கு எதிராக கொந்தளித்து போராட்டம் நடத்தவும் முடியாமல் அதே நேரத்தில் அமைதியாக கடந்து போகவும் முடியாமல் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்துப் பேசினார். இதற்காக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க மத்திய அரசு செயற்குழு ஒன்றை அமைத்திருந்தது. ஜெயா ஜேட்லி தலைமையிலான இந்தச் செயற்குழு பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21ஆக உயர்த்தும் பரிந்துரையை டிசம்பர் தொடக்கத்தில் சமர்ப்பித்தது.
செயற்குழுவின் யோசனையை ஏற்றுப் பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இனி இது விரைவில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும் என்கின்றனர் இதில் சில பிரிவுகளுக்கு மாற்றம் செய்யலாம் எனவும் அதாவது ஆண் பெண் இரண்டு பெற்றோரின் சம்மதம் இருந்தால் 18 வயது அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என அதில் உட்பிரிவை சேர்க்கலாம் என்று கூறப்படுகிறது ஆனால் இது உறுதியான தகவல் இல்லை.
இருப்பினும் பெண்ணின் திருமண வயதை மத்திய அரசு உயர்த்த முக்கிய காரணம்.. 18 வயதை அடைந்த பெண்கள் பெற்றோர் சம்மதம் இன்றி காதல் திருமணம் செய்வதும் பிறகு இரண்டு வருடங்களில் காதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டு தங்கள் வாழ்க்கையை தொலைப்பதும் என பல சம்பவங்கள் முன்னுதாரணமாக அமைந்து இருக்கின்றன. இது ஒருபுறம் என்றால் பல பெண்கள் லவ் ஜிகாத் எனும் காதல் வலையில் வீழ்த்தி மதம் மாற்றம் செய்யப்படவும் காரணமாக அமைந்து விடுகின்றன குறிப்பாக கேரள மாநிலத்தில் பல இளம் வயது பெண்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதும் அவர்கள் குறிப்பாக 18 வயது முதல் 21 வயதில் பாதிப்பை சந்தித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்துதான் மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் கேரளா அசாம் மாநிலங்களை சேர்ந்த பல கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கள் மத பெண்கள் லவ் ஜிஹாத் மூலம் பாதிக்கப்படுவதாகவும் பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என பிரதமரை பல முறை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தியதன் மூலம் பெண்களும் நிச்சயம் கல்லூரி படிப்பை அடையும் சூழல் உண்டாகும் அதே வேலையில் காதல் வலையில் வீழும் சூழல் இருந்து பாதுகாப்பு கொடுத்து இரட்டை மாங்காயை அடித்துள்ளது மத்திய அரசு.