தமிழகத்தில் தனியார் உணவகத்தில் பணிபுரியும் ஒருவர் இந்தி கற்றுக்கொள் எனக்கு தமிழ் தெரியாது என பேசிய நிலையில் இன்று முழுவதும் தமிழக ஊடகங்களும் தமிழ் ஆர்வலர்கள் என அறியப்படும் நபர்களும் இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பு என பலரும் பலவிதமாக விமர்சனங்கள் ஆதரவு என முன்வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் தன் பங்கிற்கு வீடியோ வெளியிட்டார் செந்தில் அதில் அவர் கூறிய கருத்து கருத்து என்று சொல்வதை காட்டிலும் கதை என்றே சொல்லலாம், ஒரு தனியார் உணவகத்திற்கு சென்றாராம் செந்தில், அங்கு வந்த பரிமாறுபவன் ஒருவன் வந்தானாம் அவனுக்கு தமிழ் தெரியவில்லையாம், மாறாக இவர் சொன்னதை கேட்டு கொண்டு உணவு எடுத்து வர நேரமாகிவிட்டதாம், உடனே ஓனரை கூப்பிட்டு மிரட்டி விட்டாராம், நான் ஹோட்டலுக்கு சென்றால் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேசமாட்டேன் மாறாக அவர்களை தமிழில் பேச வைப்பேன் என செந்தில் பேசினார்.
ஆனால் வார்த்தைக்கு வார்த்தை ஹோட்டல் என்கிறீர்களே செந்தில் அது தமிழ் வார்த்தையா? உணவகம் என சொல்ல தெரியாதா வீர வசனம் பேச வேண்டியது செயலில் ஒன்றும் இல்லை என நெட்டிசன்கள் அவரை கடும் கிண்டலுக்கு உள்ளாக்கி வருகின்றனர், நான் தோசை சாப்பிட இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார் செந்தில், அப்போது முகத்தில் செந்தில் வெளிப்படுத்திய ஆவேசம் முன்னணி நடிகர்கள் திரையில் வெளிப்படுத்தும் காட்சிகளை காட்டிலும் உணர்ச்சி பொங்க இருந்தது.
ஏற்கனவே சாதா தோசை ஆதிக்க தோசை என கூறி கடும் கிண்டலுக்கு உள்ளானார் மதிமாறன் இப்போது செந்தில் என்ன ஆக போகிறாரோ? ஆமாம் இந்த பிரசாந்த் கிஷோர் எந்த மொழி பேசுவாராம் என கிண்டல் அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .