தமிழகத்தில் அடுத்தடுத்து தரமான சம்பவங்கள் அரங்கேறி வருவதை, தமிழக அரசியல் களத்தை தீவிரமாக ஆராய்ந்து வருபவர்கள் அறிந்து கொள்ளலாம், அந்த வகையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக மின்சார வாரியத்தில் மிக பெரிய ஊழல் நடைபெற இருப்பதாகவும், வலுவிழந்த ஒரு கம்பெனியை ஆளும் கட்சியான திமுக பிரமுகர் வாங்கி.,
அமைச்சர் ஒருவர் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி வரை காண்ட்ராக்ட் கொடுக்க பேரம் பேசி வருவதாகவும், இதுகுறித்த ஆவணங்கள் தங்கள் கைகளில் இருப்பதாகவும், ஒப்பந்தம் கையெழுத்து போட்டால் ஆவணங்கள் வெளியிட படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இது பலத்த எதிர்ப்புகளை ஆளும் கட்சிக்கு பாமர மக்களிடயே கொண்டு சேர்த்தது, ஆட்சிக்கு வந்து 6 மாதம் முடிவதற்குள் ஒரு துறையில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி உடனான ஒப்பந்தத்தில் முறைகேடா என பலரும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்ப தொடங்கினர், (இந்த செய்தி குறித்து TNNEWS24 கோட்டையில் நடந்த மாற்றம் என செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.)
இந்த சூழலில் தமிழகத்தில் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்துப்பவர்களில் கவனத்திற்கு சென்ற அண்ணாமலை கொடுத்த தகவல், பொது ஊடகங்கள் மூலம் மக்களுக்கு செல்லாமல் பார்த்து கொள்ள ஒரு இரவில் ஒரு குழுவே வேலை செய்துள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலை கூறிய ஊழல் குற்றசாட்டை திசை திருப்ப ஜூமாட்டோ நிறுவனம் தமிழ் மொழியை அவமானப்படுத்தியதாக ஒரு செய்தியை ஊடகங்கள் திடீர் என கையில் எடுத்து பெரிது படுத்தியதாக கூறப்படுகிறது.
ஜூமாட்டோ நிறுவனம் குறித்து குற்றசாட்டு சுமத்திய விகாஸ் என்ற நபர் இதுவரை 6 ட்விட் மட்டுமே தனது ட்விட்டர் ID யில் போட்டுள்ளார், அது அனைத்துமே ஜூமாட்டோ குறித்த குற்றசாட்டு மட்டுமே, இதனை அவர் திமுகவினர் மற்றும் அவர்களது ஆதரவு ஊடகத்தினரை மட்டுமே டேக் செய்துள்ளார். அதனை பார்க்க கிளிக்.
இந்த சம்பவம் திட்டமிட்டு ஒரு இரவில் உருவாக்கப்பட்ட சம்பவமாகவே பார்க்க படுகிறது, அதிலும் குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை நாங்கள் ஒத்த ஓட்டு வாங்கவில்லை ஊரக உள்ளாட்சியில் எங்கள் பிரதிநிதிகள் 381 பேர் இருக்கிறார்கள் அதில் எங்கள் பெண் வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்களை காட்டிலும் இரண்டு மடங்கு வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளனர் என தெரிவித்த செய்தி எந்த ஊடகத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
மேலும் அண்ணாமலை தெரிவித்த ஊழல் குற்றசாட்டு குறித்தும் எந்த ஊடகத்திலும் விவாதம் நடத்தவில்லை மாறாக ஒரு இரவில் யாரோ ஒரு பணியாளர் இந்தி தேசிய மொழி என கூறியதையும், தனக்கு தமிழ் தெரியாது என கூறியதையும் வைத்து விவாத பொருளாக மாற்றி விவாதம் செய்துள்ளன தமிழக ஊடகங்கள்.
ஆனால் இந்த விவகாரம் முழுக்க முழுக்க "பிரதமர்" கவனத்திற்கு சென்றுள்ளது, இதையடுத்து நேற்று நள்ளிரவு நேரத்தில் பிரதமர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் ID யில் தமிழக பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார், அண்ணாமலையின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து பதில் அளித்துள்ளார் பிரதமர் அதில்.,தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் சக காரியகார்த்தாக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நன்றி.அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள், திசை திருப்பல்கள், ஊடகங்களின் இரட்டை வேடம், ஊழல் சம்பவங்கள் அனைத்தும் எனக்கு தெரியும் என யாருக்கு தெரியவேண்டுமோ..?அவர்களுக்கு தெரிவித்துவிட்டார் பிரதமர் மோடி, நேற்று அண்ணாமலை எங்களை ஒத்த ஓட்டு பாஜக என கேலி பேசிய ஊடகங்கள் நபர்கள் கவனத்தில் கொள்ளுங்கள் என தங்கள் வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய நிலையில், இன்று பிரதமர் மோடி தனது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து இருப்பது திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றிய தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
I would like to congratulate our fellow Karyakartas who have been elected in the Tamil Nadu local body polls. I thank the sisters and brothers of Tamil Nadu who reposed their faith in us.
— Narendra Modi (@narendramodi) October 19, 2021
We will keep working for the betterment of the wonderful state of Tamil Nadu. https://t.co/xJNjD0A12O
தொடர்ந்து தமிழகத்தில் யாரும் குறிப்பிட விரும்பாத மறைக்கப்பட்ட செய்திகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் TNNEWS24 குழுவின் முயற்சிக்கு உங்கள் ஆதரவை பதிவுகளை பகிர்வதன் மூலமும், எங்கள் சமூகவலைத்தள பக்கங்களை பின்பற்றுவதன் மூலமும் செய்து எங்களை வலுப்படுத்த உதவவும், விளம்பர தொடர்பிற்கு- 9962862140 (WHATSAPP ONLY )