ஐஐடியில் யார் தலைவராக வருகிறார்கள் தெரியுமா? பட்டியலே போட்ட ஆசிரியர் அதிர்ச்சியில் திராவிட ஸ்டாக் !IIT
IIT

சென்னை ஐ.ஐ.டியில் தமிழ் தாய் வாழ்த்து பாடவில்லை என ஆவேசமாக அறிக்கை கொடுத்து கொண்டு இருக்கின்றன, தமிழகத்தை சேர்ந்த கட்சிகளும் அமைப்புகளும் இந்நிலையில் இயற்பியல் ஆசிரியர் பெரியசாமி தங்கவேல் ஐஐடியில் தமிழமாணவர்களின் நிலை குறித்து வேதனை அடைந்துள்ளார்.

மேலும் முக்கியமான 8 தகவல்களை அவர் பட்டியலும் இட்டுள்ளார் அது பின்வருமாறு :- ஐஐடி மெட்ராஸில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து வாழ்த்து பாடப்படவில்லை. அதற்காக நிறைய கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளனர். வரவேற்க வேண்டியதுதான். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து வாழ்த்து பாட வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதைவிட வேறு சில தரவுகள் என்னை வேதனைப் படுத்துகிறது. 

1. ஐஐடி மெட்ராசில் வெறும் 5% மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள்  2. ஐஐடி மெட்ராஸ் இல் நடக்கும் மாணவர்கள் செயலாளர் தேர்தலில் எப்பொழுதுமே தமிழ்நாட்டு மாணவர்கள் ஜெயிப்பதில்லை. எப்பொழுதுமே ஆந்திர மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். 3. தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை வருடத்திற்கு 10 ஆயிரம் கோடிகள்.  4. இந்த 10 ஆயிரம் கோடியில் சுமார் 7500 கோடிகள் வரை ஆசிரியர்கள் சம்பளத்திற்கு மட்டுமே செலவிடப்படுகிறது

5. ஏ கே ராஜன் அவர்கள் கமிட்டி அறிக்கையின் படி தமிழ்நாட்டில் 6.5 லட்சம் மாணவர்கள் மேல்நிலைக்கல்வி யான 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கிறார்கள். 6. அப்படி என்றால் சராசரியாக ஒரு மாணவருக்கு அரசாங்கம் 1.54 லட்சம் ரூபாய்கள் ஒரு வருடத்திற்கு செலவு செய்கிறது. (தனியார் பள்ளிகளில் கூட சராசரியாக 1.54 லட்சம் வருடத்திற்கு கட்டணம் வாங்கப்படவில்லை என்பது கொசுறு தகவல்)

7. இவ்வளவு செலவு செய்தும் ஒரே ஒரு மாணவரை கூட அரசு பள்ளியில் இருந்து ஐஐடி மெட்ராஸ்க்கு அனுப்ப முடியவில்லை. அத்தி பூத்தது  போல் ஒரு சில மாணவர்கள் 10 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அரசு பள்ளியில் இருந்து IIT செல்கிறார்கள். 8. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் MBBS தகுதிக்கான சேர்க்கை என்ற நிலை இருந்த பொழுது கூட அரசுப் பள்ளியில் இருந்து வருடத்திற்கு வெறும் 19 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். அது வெறும் 0.7% மட்டுமே ஆகும். 

இதுவரையில் இதையெல்லாம் கேள்வி கேட்க ஒரு அரசியல் கட்சியால் கூட முடியவில்லை என்பதே வருத்தமான உண்மை.  ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாட வைக்கப்பட வேண்டும்.  அதைவிட ஐஐடியில் நிறைய தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் அந்தப் பட்டமளிப்பு விழாவில் நிறைய தமிழ்நாட்டு மாணவர்கள் பட்டம் வாங்க வேண்டும் என்பதே முக்கியம் என்று அறிவு கூறுகிறது.  தமிழையும், தமிழர்களையும் வைத்து அரசியல் மட்டும் செய்யாமல் அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு அனைத்துக் கட்சிகளும் முயற்சிசெய்து போராட வேண்டும்.

இதைக் கூறுவதற்கு அனைத்து மொழிகளும், அனைத்து மதங்களும், அனைத்து சாதிகளும் சமம் என்று நினைக்கும் இந்தியனாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ் மொழியின் பாலும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் பற்றுக் கொண்ட ஒரு தமிழனாக கூட இருக்கலாம் என பெரியசாமி தங்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

More news from tnnews24

Share at :

Recent posts

View all posts

Reach out