இந்திய எல்லையில் என்ன நடக்கிறது என என பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார், தற்போது பிரதமர் மோடியின் அரசாங்கம் இந்திய இராணுவம் கையில் பிளாங் செக் கொடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
இந்தியா தன் எல்லையினை காக்க என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் அவசரமாக செய்கின்றது, எல்லையில் இப்பொழுது இந்தியாவுக்கு தேவை ஆளில்லா விமானங்கள் அதுவும் தாக்குதல் ரக விமானங்கள்,
இன்றைய ராணுவ உலகில் தவிர்க்க முடியாத அம்சம் ஆளில்லா விமான தாக்குதல், சீனாவிடம் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் உள்ள நிலையில் (அது வேலை செய்யுமா இல்லையா என்பது வேறு விஷயம்) இந்தியா அதில் பின் தங்கி உள்ளது
இந்நிலையில் அவசரமாக 30 ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்க இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது முன்பெல்லாம் இந்திய ராணுவம் ஒரு துப்பாக்கி வேண்டுமென்றால் கூட இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பிக்கும் அவர்கள் நிதி அமைச்சுக்கு அனுப்புவார்கள் பின் ஆயுதம் வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கபடும்.
இந்த ஆலோசனை நடந்து முடியவே 6 மாதம் முதல் 1 வருடமாகும் மோடி அரசு இதை மாற்றியது, ராணுவத்துக்கு தேவையான சாதனங்களை அவர்களே வாங்கிகொள்ளவும் அவர்களே நிதி அமைச்சுடன் பேசி உரிய தொகை வாங்கலாம் எனவும் சட்டம் திருத்தபட்டது
இது கிட்டதட்ட ராணுவம் கையில் "பிளாங்க் செக்" கொடுத்ததற்கு சமம், இதனால் இந்திய ராணுவத்தின் ஆயுத கொள்முதல் இலகுவாகின்றது, இது போக மோடி அரசு உலக நாடுகளுடன் செய்திருக்கும் ஒப்பந்தம், நேருவின் அணிசேரா கொள்கையினை கடாசிய நிலையில் அணி நாடுகளின் ஆதரவு என ராணுவத்துக்கு ஆயுதம் வாங்க வாய்ப்பு அதிகம்
இதனால் அவசர கதியில் அமெரிக்காவிடம் இருந்து ரீப்பர் ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்குகின்றது இந்தியா, அதே நேரம் இந்தியாவிலும் ஆளில்லா விமானங்கள் உண்டு, ஆனால் இவை உளவு பார்க்கும் விமானம் தாக்குதல் விமானம் அல்ல, இந்தியாவில் 1980களிலே ஆளில்லா விமான யுகத்தை தொடங்கி வைத்தவர் விஞ்ஞானி ரஸ்டம் டமானியா, அவர் பெயரில் ரஸ்டம் ஆளில்லா விமானங்கள் இங்கு உண்டு
இந்தியாவில் அப்துல் கலாம், சதிஷ்தவான் போல ருஸ்டம் டாமானியாவின் சேவையும் அளபரியது, அவர் சேவையின் பலன்கள் உரிய நேரத்தில் கைகொடுக்கின்றன, அவர்தான் ஆளில்லா விமானங்களின் அவசியத்தை அன்றே இங்கு உணரவைத்தார்.
இனி அதனை தாக்குதல் விமானமாக மாற்ற கடும் பிரயர்த்தனம் செய்கின்றது இந்தியா, "மேக் இன் இந்தியா" உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரஸ்டம் விமானங்கள் இனி மிக நவீனமாக மேம்படுத்தபடும், சீனாவின் அடாவடியில் இந்தியா மிக வேகமாக தன்னை மேம்படுத்துகின்றது, இந்திய ராணுவத்தை பலமாக மாற்றிகொண்டிருப்பர் உண்மையில் சீன அதிபர் "ஜி ஷின்பெங்"
அவர் அப்பக்கம் தைவான் உள்ளிட்ட நாடுகளை பலமாக்குவது போல இந்தியாவின் ராணுவ வலிமைக்கும் ரகசியமாக அல்ல நேரடியாகவே உதவி கொண்டிருக்கின்றார் அவருக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.