24 special

சிக்கன் க்ரேவின்னா ரொம்ப பிடிக்குமோ... சிக்கன் கிரேவியை சாப்பிட்ட இளைஞருக்கு ஏற்பட்ட நிலைமையை பாருங்க....!!!

CHICKEN GRAVY
CHICKEN GRAVY

தற்போது உள்ள அனைவரும் நம் வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவுகளை பெரிதும் விரும்புவது கிடையாது. தினந்தோறும் வாய்க்கு ருசியாக வித்தியாச வித்தியாசமான உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவுகள் முழுக்க ஆரோக்கியமாகத்தான் செய்யப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். சில சமயங்களில் உணவகங்களில் வாங்கும் உணவில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற பூச்சி வகைகளும் இறந்து கிடப்பதே பார்க்க முடிகிறது. இவ்வாறு பூச்சிகள் இறந்த உணவுகள் விற்கப்பட்டு அதனை வாங்கி செல்பவர்கள் உண்ணும் பொழுது பார்த்து அதன் பிறகு அந்த கடையின் மீது நடவடிக்கைகள் எடுப்பது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டு தான் உள்ளது. மேலும் சிலர் இது போன்ற பூச்சி வகைகள் இறந்து கிடப்பது கூட தெரியாமல் அவற்றை வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர்.


அதன் பிறகு உடல் நிலையில் திடீரென்று ஏற்படும் மாற்றங்களால் மருத்துவமனைகளுக்கு சென்ற பிறகு இவ்வாறு கடையில் வாங்கி உண்ட உணவில் இறந்து போன பூச்சி இருந்த உணவை சாப்பிட்டதால் இப்படி ஆகி உள்ளது என்று தெரிய வருகிறது.மேலும் சிலர் இது போன்ற உணவுகளை உண்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய வகையிலும் இருந்து வருகின்றனர் மேலும் சிலர் இறந்தும் விடுகின்றனர். மேலும் சமீபத்தில் கூட ஹோட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு ஒரு குடும்பமே உயிரிழந்து விட்டனர் என்று செய்திகள் வெளியாகியது. இதுபோன்று  சுகாதாரமற்ற உணவகங்களில் வாங்கி உணவுகளை உண்பதால் நிறைய பேருக்கு வாந்தி பேதி போன்றவை வந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது பார்க்க முடிகிறது. இதனால் அனைவரும் ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதே நிறைய ஆபத்துக்களை விளைவிக்கிறது என்று அதற்கு வீட்டிலேயே காய்கறி வாங்கி  ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட்டு விடலாம் என்று அனைவரும் நினைக்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் அவ்வபோது சாப்பிடுவதை தவிர்த்து மீதமுள்ள உணவை பத்திரமாக வைத்து அடுத்த வேலையை உணவிற்காக சூடு செய்து சாப்பிடும் பழக்கத்தையும் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது இவ்வாறு ஹோட்டலில் வாங்கிய உணவு ஒன்றினை மறுமுறை சூடு செய்து சாப்பிட்ட ஒருவர் தற்பொழுது இறந்துள்ளார்!! அது குறித்து விரிவாக காணலாம். மதுரை கோசா குளம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற இளைஞர் ஹோட்டலில் இருந்து சிக்கன் கிரேவி உணவை வாங்கி சாப்பிட்டு தற்பொழுது உயிரிழந்துள்ளார். ஆனந்த் ராஜுக்கு திருமணம் ஆகி 7 வயதில் குழந்தை இருக்கும் நிலையில் ஆனந்தராஜின் தந்தை  கடந்த 26 ஆம் தேதி  செட்டிநாடு சிக்கன் கிரேவி ஒன்றினை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்துள்ளார். அந்த கிரேவியை இரவு ஆனந்தராஜ் மற்றும் அவரின் குழந்தை இருவரும் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த கிரேவியை மறுநாள் காலையில் ஆனந்தராஜ் மட்டும் சூடு செய்து சாப்பிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஆனந்த்ராஜ்க்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டு மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் கூட தொடர்ந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி சரியாக நிலையில் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் மாலை ஆனந்தராஜ் க்கு மயக்கம் ஏற்பட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆனந்தராஜின் உடலை பரிசோதிக்கும் பொழுது மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.