தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே இரு நடிகர்களுக்கிடையே பெரும் போட்டி நிலவி வரும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்த போட்டியானது காலம் காலமாக நடந்து தான் வருகிறது. முன்னணி நடிகர் இருவருக்கும் இடையே, நடிகை இருவருக்கும் இடையே, வில்லன் இருவருக்கும் இடையே, ஏன் காமெடி நடிகர்களுக்கு இருவருக்கும் இடையே கூட இந்த போட்டி தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என தொடர்ச்சியாக அதனை இந்த காலகட்டத்திலும் இழுத்துக் கொண்டிருப்பவர்கள் விஜய் - அஜித். இவர்கள் இருவருக்கும் இடையே தான் போட்டியா என்று பார்த்தால் அது கிடையாது இருவரும் திரை ரீதியிலும் சரி தனிப்பட்ட ரீதியிலும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களின் ரசிகர்களுக்கிடையே பெரும் போட்டி நிலவுகிறது. விஜய் அல்லது அஜித் புதிய படங்கள் குறித்த அப்டேட்டுகள் என ஏதேனும் ஒன்று சமூக வலைத்தளங்களில் கசிந்தால் போதும் இரண்டு ரசிகர்களுமே தங்கள் ஹீரோக்களை தூக்கி நிறுத்த கிளம்பிடுவார்கள். அதேபோன்று விஜயின் ஒரு படம் ஒரு குறிப்பிட்ட அளவு பட்ஜெட்டில் வசூல் சாதனையை பெறுகிறது என்றால் அதற்கு அடுத்தோ அல்லது முன்பாகவோ வெளியான அஜித்தின் படங்களோடு அதனை ஒப்பிட்டு காரசாரமான பேச்சுகளும் சமூக வலைதளங்களில் பதிவுகளாக அனல் பறக்கும். அதே சமயத்தில் இரு நடிகர்களின் படமும் ஒரே விடுமுறையில் திரையிடப்படுகிறது என்றால் சொல்லவா வேண்டும் இரண்டு படத்தில் எந்த படம் அதிக வசூல் சாதனையை பெற்றிருக்கிறது, நம்ம நடிகரை தோற்றுப் போக விடக்கூடாது என்பதற்காகவே ஒரு படத்தை இரண்டு மூன்று தடவைக்கு மேல் பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அப்படி விஜய் மற்றும் அஜித்தின் வீரம் - ஜில்லா திரைப்படத்தின் இடையே கடுமையான போட்டியிட வேண்டியது அதற்குப் பிறகு வாரிசு மற்றும் துணிவு படத்திற்கிடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் இந்த போட்டிகளை அஜித் மற்றும் விஜய் இருவருமே பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.ஏனென்றால் தங்களது பயணங்களை ஒருசேர தொடங்கி ஒரு சமயத்தில் ஒரே கட்டத்தில் பயணித்து ஒரு திரைப்படத்தின் இருவருமே முன்னணி நடிகர்களாக நடித்து தன் திறமையால் வளர்ந்துள்ளவர்கள். அப்படி விஜய் மற்றும் அஜித் இருவருமே சேர்ந்து நடித்த படமான ராஜாவின் பார்வையிலே படம் இருவரும் இணைந்து நடித்த ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து மற்றுமொரு படத்திலும் இணைந்து நடிக்க வேண்டிய ஒரு சூழலை ஏற்பட்டுள்ளது குறித்து குணசித்திர நடிகரும் சினிமா பிரபலமான பாவா லட்சுமண் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.