24 special

களைகட்டும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்டீஸ் திருமணம்... 50 ஏழை எளிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்து சீதனமா என்ன குடுத்தாங்க தெரியுமா?

Anand Ambani
Anand Ambani

ரிலையன்ஸ் குடும்ப தலைவரும் இந்தியாவின் முக்கிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டீஸ் இருவருக்கும் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அப்பொழுது இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் என்னென்ன அது குறித்த புகைப்படங்கள் எல்லாம் வெளியானதே என்று நீங்கள் கேட்டால் அவை அனைத்துமே திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் ஆகும், அதாவது ஜூலை மாதத்திற்கான திருமணத்திற்கு மார்ச் மாதத்தில் இருந்தே திருமணத்திற்கான முன் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டது அம்பானி குடும்பம். அதாவது முதலில் ஆனந்த அம்பானியின் முதல் பிரீ வெட்டிங் நிகழ்ச்சியானது மார்ச் மாதத்தில் குஜராத்தின் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் இந்திய திரை பிரபலங்களும் விளையாட்டு பிரபலங்கள் மற்றும் சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


இதற்கு அடுத்து கடந்த மாத இறுதியிலும் இவர்களின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டமானது இத்தாலியில் ஒரு சொகுசு கப்பலில் மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடந்தது. அந்த மூன்று நாட்கள் நடைபெற்ற கொண்டாட்டத்திலும் திரை பிரபலங்கள் ஏராளமான கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு முன்பாகவே பல திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை அம்பானி குடும்பம் ஏற்பாடு செய்து மிகவும் பிரம்மாண்டமாகவே நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று குஜராத் திருமணங்களின் முக்கிய நிகழ்வான தாய்மாமன் சீர் நிகழ்ச்சி முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மருமகளை அவரது தாய் மாமன் இனிப்பு, புடவை, நகைகள், வெள்ளை நிற வளையல்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக கொண்டு வந்து சந்திக்கிறார். மேலும் குஜராத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மாமேரு சடங்கு என்று பெயராகும்! முன்னதாக ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு முன்பு ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பிரம்மாண்ட நிகழ்வையும் அம்பானி குடும்பம் முடிவு செய்து இருந்தது.

அதன்படி கடந்த ஜூலை மூன்றாம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி மற்றும் நீரா அம்பானி தம்பதிகள் ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான முழு நிதி உதவியையும் செய்ததோடு திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.அப்படி நடைபெற்ற இந்த திருமண விழாவில் 50 புதுமண தம்பதிகளும் அவர்களின் உறவினர்கள் என கிட்டத்தட்ட 800 பேர் கலந்து கொண்டுள்ளனர் மேலும் புதுமண தம்பதிகளுக்கு தங்கத்தினால் ஆன மாங்கல்யம், மோதிரம், மூக்குத்தி மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரங்கள் மற்றும் நெக்லஸ் போன்றவற்றை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பரிசுகளாக வழங்கியுள்ளனர். இதைத்தவிர ஒவ்வொரு புதுமண தம்பதிக்கும் ஒரு லட்சத்தி ஒரு ரூபாய் காசோலையை சீதனமாக வழங்கியதோடு ஒரு ஆண்டிற்கு தேவையான மளிகை சாமான்கள், பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி, ஃபேன், மெத்தை என அனைத்தையும் சீதனமாக முகேஷ் அம்பானி குடும்பம் வழங்கியுள்ளது.

இந்த திருமண நிகழ்வை இந்த வருடம் மட்டுமின்றி இனி வருகின்ற அடுத்தடுத்த வருடங்களிலும் நடத்தி வைக்க உள்ளதாக முகேஷ் அம்பானி குடும்பம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த உலகத்தையே பிரம்மிப்பில் வாழ்த்தும் வகையில் திருமண விழாக்களை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ததோடு மட்டுமின்றி அந்த திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏழை எளிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு அவர்களுக்கு வேண்டிய சீர்வரிசைகளையும், சீதனமாக ஒரு லட்சத்தி ஒரு ரூபாயை வழங்கியதும் தற்போது பல பாராட்டுகளை பெற்று வருகிறது.