
தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே, தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரக்கத் தொடங்கியிருப்பதைப்போலவே, மேற்கு வங்கத்திலும் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. இதுவரை தாங்கள் ஆட்சியமைக்காத மாநிலங்களின் பட்டியலிலிருந்த ஒடிசாவை, கடந்த ஆண்டு `டிக்’ அடித்தது பா.ஜ.க. அடுத்ததாக, இந்தப் பட்டியலிலுள்ள மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தை குறிவைத்திருக்கிறது!
தொடர்ச்சியாக மூன்று முறை வென்று முதல்வரான மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்பி, வங்கத்தில் தாமரைக் கொடியேற்ற வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.அதுமட்டுமில்லாமல் தமிழ்கத்திலும் தேசிய ஜனநாயகா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேலைகளை தொடங்கிவிட்டது. இந்த இரு மாநில தேர்தல்களிலும் கூடவே ஆர்.எஸ்.எஸ்-ஸும் துணை நிற்க, தேர்தல் பணிகள் அங்கே பரபர வேகமெடுத்திருக்கின்றன. 2011 சட்டமன்றத் தேர்தலில், 34 ஆண்டுக்கால இடது முன்னணி ஆட்சிக்கு முடிவுகட்டி, மாபெரும் வெற்றிபெற்றது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ். அந்தத் தேர்தலில் ஓரிடத்தில்கூட வெல்லாத பா.ஜ.க., 2016 தேர்தலில் மூன்று இடங்களைக் கைப்பற்றியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு வங்கத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில், 22 தொகுதிகள் திரிணாமுல் வசமாகின. அதேநேரம் அசுர வளர்ச்சி பெற்று, 18 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றி மம்தாவுக்கு `ஷாக்’ கொடுத்தது பா.ஜ.க.அதே போல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மம்தாவே முதல்வரானாலும், மூன்று எம்.எல்.ஏ-க்களை மட்டுமே கொண்டிருந்த பா.ஜ.க., 77 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியானது.தேர்தல் அரசியலில் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ்., பிரசாரக் களத்தில் பா.ஜ.க-வுக்கு இம்பேக்ட் பிளேயராகச் செயல்படுகிறது. கட்சி தொடங்கப்பட்ட காலம் தொட்டே பா.ஜ.க-வுக்குத் தேர்தல் களத்தில் ஆர்.எஸ்.எஸ் உதவி வருகிறது.
சமீபத்தில், நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார் பிரதமர் மோடி. ஒரு பிரதமர், ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்குச் செல்வது இதுதான் முதன்முறை. அங்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தைச் சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் மோடி. குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக மேற்கு வங்கத்துக்குச் சென்ற மோகன் பகவத், அங்கு 10 நாள்கள் தங்கியிருந்து தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். அவர் வந்து சென்ற பிறகு, பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் ஒத்துழைப்போடு தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக இரண்டு நாள் கூட்டம் ஒன்றும் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.அதே போல் தமிழகத்திற்கும் மோகன் பகவத் வந்து சென்றார்.
மேலும் மேற்குவங்கத்தில் மோகன் பகவத்தின் ஆலோசனைக் கூட்டங்கள் குறித்துப் பேசும் மேற்கு வங்க ஆர்.எஸ்.எஸ் வட்டாரம், ``தற்போது மாநிலம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு 6,000 கிளைகள் இருக்கின்றன. அவற்றை 12,000-ஆக உயர்த்த உத்தரவிட்டிருக்கிறார் மோகன் பகவத். இதற்கு முன்பாக, யாரையும் பிரசாரம் செய்து ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்க்கச் சொல்லி எங்களுக்கு உத்தரவு வந்ததில்லை. ஆனால் இந்த முறை, மோகன் பகவத்தே ஆர்.எஸ்.எஸ்-ஸில் இணைய மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.:தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும், 'ஷாகா' எனப்படும் தினசரி கூடுதல், வாரக் கூடுதல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. நடப்பாண்டில், 1,368 கிளைகள் துவங்கப்பட்டு மொத்தம், 4000 கிளைகள் உள்ளன.
ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை ஒருங்கிணைப்பது, மண்டலம், கிராமங்களில் வீடு வீடாக சென்று, 100ம் ஆண்டு விழா குறித்து விளக்குவது, ஹிந்து ஒற்றுமை மாநாடுகள் நடத்துவது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.மேலும் தமிழ்கத்தில் சட்டம் ஒழுங்கு ஊழல்கள் குறித்து பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. ஆர்.எஸ்.எஸ் கிராமம் கிராமமாக செல்ல உள்ளது.