உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கழகத் தலைவன் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்தப் படம் வெளியாவதற்கு முன் படம் பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்தப் படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம் என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில்,
முதலமைசர் மு.க ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அடையாறு ஆலமரம் பூங்காவில் வாக்கிங் போகும்போது கலகத் தலைவன் படம் பார்த்தீர்களா? எப்படி இருந்தது? என்று ரிவ்யூ கேட்டதும். அதற்கு மா சுப்பிரமணியன் முதல் நாளிலே நான் படம் பார்த்தேன், படம் ரொம்ப நல்லா இருக்கு. சில படங்களில் பொதுவாக பாட்டு வரும் பொழுது அல்லது சில காட்சிகளின் போது தியேட்டரில் பெண்கள் உட்பட பலர் எழந்து போவது இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட யாரும் எழுந்து போகவில்லை. படத்தை எல்லோரும் ரசித்துப் பார்க்கின்றனர் என்றும் பதில் கூறியதற்கு. முதல்வர் ஸ்டாலின் ரிப்போர்ட் நல்லா இருக்கு என்று கூறிய வீடியோ காட்சி சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிது.
இந்த வீடியோ வைரலாகும் அதே சமயத்தில், பலவிதமான கலவையான விமர்சனங்களும் பொதுமக்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களிடம் எழுந்துள்ளதும் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் பத்திரிக்கை செய்திகளில் கால்பந்தாட்ட வீராங்கனை மருத்துவர்களின் கவனக்குறைவாளல் உயிரிழந்ததும், அதன் மறுநாளே கடலூரில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு தவறான சிகிச்சையால் கண் பார்வை போனதாக வந்த வீடியோ வைரலாகி இருக்கும் சூழ்நிலையில் கழக தலைவனுக்கு இது தேவையா? என்று கழக உடன்பிறப்புகள் மத்தியிலேயே விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா துறையில் உள்ள 90 சதவீத படங்கள், சன் பிக்சர்ஸ் மூலமாகவோ அல்லது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் மூலமாகவோ வெளிவந்து கொண்டிருக்கிறது என்று திரைத் துறையிலேயே விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அமைச்சர்களின் துறையில் நடக்கும் ஊழல்கள், நிர்வாக திறமையின்மை. நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிப்பு சிலை திருட்டு, ஏன் கோவிலே காணாமல் போய் உள்ளது என்றும், விலைவாசி உயர்வு மற்றும் திமுக அமைச்சர்களின் துறையில் நடக்கப் போகும் ஊழல் முதற்கொண்டு பட்டியல் போட்டு மேடைக்கு மேடை போராட்டங்கள் மூலம் விமர்சித்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூலம் தமிழக பாஜக அசுரத்தனமாக வளர்ந்து ராட்சஸான முன் இருக்கிறது என்று மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கும் சூழ்நிலையிலும், முதல்வரே ஆட்சிப் பொறுப்பில் ஏற்றதில் இருந்து சரியாக தூங்க முடியவில்லை என்று கூட்டத்தில் புலம்பிய வீடியோ எதிர்க்கட்சிகளால் வைரல் ஆகி வரும் சூழ்நிலையில், அண்ணாமலை ஏற்கனவே முதல்வருக்கு லவ் டுடே படம் கேட்க்குதா என்று பொதுக்கூட்டத்தில் கடுமையான விமர்சனம் வைத்தம், ஆட்சியில் இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும், ஆட்சியில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி கேட்காமல் காலை வாக்கிங்கின் பொழுது தமிழக மக்களின் நலன் கருதாமல் தன்மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் பற்றி அமைச்சரிடம் கருத்து கேட்கிறாரே முதலமைச்சர் என்று மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.
Gokulakrishnan S