24 special

எவ்ளோ சொன்னாலும் இப்படி பண்ணா நான் என்னதான் பண்றது? ஸ்டாலினுக்கு தலைவலி ஆரம்பம்!

Periyasamy, stalin
Periyasamy, stalin

சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், உறுப்பினர்கள் தூக்கமே இல்லாம செய்றாங்க என்று ஸ்டாலின் புலம்புனதையும், வீட்டில பாத்ரூம்லயும் பெட்ரூம்லையும் தான் காமரா இல்ல; மூன்றாவது கண் ணுன்னு சொல்ற காமரா எல்லா இடத்துலையும் இருக்குப்பா; இனியாவது பாத்து பேசுங்க’ அப்டின்னு சொல்லி சில நாள் கூட ஆகல; ஒபனாவே திமுகவில் இப்போ மந்திரிகள் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்வது தான்  எல்லா கட்சிகளும் பேசும் சப்ஜெக்டா மாறி இருக்கு. 


அண்ணாமலை ஏற்கெனவே திமுக அரசின் செயல்பாடுகளை வெளிப்படையா ஒவ்வொரு கூட்டத்துலையும், மேடையிலும் கிண்டல் செய்தும் தாக்கியும் பேசி வருகிறார். இந்த  சூழ்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் வெளிப்படையா நடந்த வாக்குவாதம் முதலமைச்சர் கண்ட்ரோலில் அமைச்சர்கள் இல்லையா? என்று நினைக்க தோன்றுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி இருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று கூறியதும், அதற்கு பதிலடியாக மக்களுக்கும் முதல்வருக்கும் திருப்தி உள்ளது; வேறு யாரையும் திருப்திபடுத்தவேண்டாம் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பேசியதும் திமுக கட்சிக்குள்ள கட்டுப்பாடு இல்லைன்னு வெளிப்படையா தெரியுதுன்னு பத்திரிக்கை, மீடியா எல்லொரும் விமரிசனம் செய்யும் அளவிற்கு  உட் கட்சி பூசல் வெளியில் தெரிந்துள்ளது.

மதுரையில் கூட்டுறவு வார விழாவில் பேசிய அமைச்சர் பிடிஆர், மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத்துறை மாற வேண்டும். கூட்டுறவுத்துறை செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக இருக்கு என்றாலும் தற்போதைய செயல்பாட்டுத்திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டு நடந்து வருகிறது, ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு என்று தினமும் நடந்து வருகிறது  என்று  செய்திகள் தினந்தோறும் வருகின்றன என்றும், கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன என்றும் நடமாடும் ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்திற்கு செல்வதில்லை என்றும் புகார்கள் வருகின்றன என்றும் நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார். 

பிடிஆரின் இந்த ஓபன் டாக்குக்கு தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த போது கூட்டுறவுத்துறை வளர்ச்சி பற்றி பட்டியல் போட்டு பேசி விட்டு, நிருபர்கள் நிதி அமைச்சர் விமரிசனத்தை பற்றி கேட்ட போது, “ விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. வெளிப்படை தன்மையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மக்கள் திருப்தி அடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். முதலமைச்சரும் திருப்தியாகவே உள்ளார். வேறு யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். நான் 50 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். 7 கோடி மக்கள் திருப்தி பற்றி கூற வேண்டும். ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் நிதியே கேட்கவில்லை “ என்று அவரும் காட்டமாக பதிலளித்துள்ளார். 

இவர்கள் இருவரும் மோதிக்கொள்வது போதாதென்று துரைமுருகன் காட்பாடி யில் நடந்த அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழாவில் பேசிய பேசிய துரை முருகன்,” சில கூட்டுறவு சங்க தலைவர்களும் செயலாளர்களும் சேர்ந்தா இந்தியாவையே அவர்கள் கொள்ளை அடிச்சுடுவாங்க, கூட்டுறவு சங்கங்களில் பார்த்தொமென்றால் தொண்ண்ணுறு விழுக்காடு பணியாளர்கள் நேர்மையா தான் இருக்கிறார்கள். ஒரு சிலருடைய தவறுகளால் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் நல்ல திட்டங்கள் கெட்டுப்போகிறது என்று அவரும் தன் பங்குக்கு கூட்டுறவுத்துறையை தாக்கி  விமர்சித்துள்ளார்.

50 ஆண்டு  நீண்ட அரசியல் பிண்ணனி உடைய பெரியசாமியை விமரிசிப்பதில் வேறு ஒரு காரணமும் இருக்கிறதுன்னு தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் உடன் பிறப்புக்கள் சொல்லி வருகின்றனர்.கூட்டுறவுத்துரையில் மற்ற வேலைகளை போல எக்ஸாம் வைத்து தேர்ந்துடுக்க வேண்டும்.அப்போது தான் வெற்றிக்கு உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு முக்கியமாக அவர்கள் குடும்பத்துக்கு உதவ முடியும். ஆனால் பணம் வாங்கி கொண்டு சிலரை அப்பாயின்ட்மெண்ட் செயவது நடந்து வருகிறது என்றும் இந்த உடன்பிறப்புக்கள் சொல்லுகின்றனர். இது தொடர்பாக தான் ஐ பெரியசாமி ஓப்பனாக விமரிசிக்கப்பட்டு வருகிறார் என்றும் கட்சியில் துணை பொது செயலாளராக இருக்கும் இந்த சீனியரை ஜூனியர்கள் இவ்வாறு பப்ளிக்காக தாக்குவது எந்த வகையில் நியாயம்? என்று மற்ற சீனியர்கள் முணுமுணுக்கிறார்கள். 

ஆனால் ஐ.பெரியசாமியை பொறுத்த வரை சீனியர் என்ற முறையில் கட்சியில் ஒரு தொனியோடு தான்  நடந்துக்கறார் என்றும் முதலில் இருந்தே ஐ.பெரியசாமி தரப்புக்கு அதிக வளமில்லாத துறையை ஒதுக்கி விட்டதாக ஒரு  எண்ணத்துடன் அவர்கள் டீம் ஒரு மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கிறார்கள் என்று கட்சிக்குள் ஒரு பேச்சு பேசப்பட்டு வருகிறது. ஆனால் பெரியசாமி தரப்பு ஆதரவாளர்களோ அதெல்லாம் இல்லை, இதெல்லாம் தேவையில்லாத வதந்தி என்று சொல்லி வருகிறார்கள். 

இது திமுகவின் ஒரு உட்கட்சி விவகாரம் என்று தூக்கி போட முடியாது .ஏனென்றால் பொது வெளியில் வாய்ச்சண்டை நடந்திருக்கிறது என்று அரசியல் விமரிசகர்கள் சொல்லி வருகிறார்கள். திமுகவின் அரசியலை விமரிசிக்கும் அண்ணாமலை தன்னுடைய உரையில் இதைப்பற்றி கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். 

மூத்த பத்திரிக்கையாளர்கள் பலரும் ஏற்கெனவே பிஜேபி கொஞ்சம் கொஞ்சமா தமிழ் நாட்டில் அரசியல் களத்தில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வந்து கொண்டு இருக்கும்போது திமுக அமைச்சர்களின் இந்த நிலைப்பாடு தேவையா? என்ற வகையில் கேள்வி எழுப்புகிறார்கள். 

திமுகவின் அமைச்சர்கள் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லையா; அவர் இந்த நிலையை எப்படி ஹாண்டில் செய்யப்போகிறார்ன்னு ஆவலோடு அரசியல் விமர்சகர்களும் பொது மக்களும் கவனிக்க  ஆரம்பித்து விட்டார்கள். ஸ்டாலின் எடுத்து வைக்கப்போகும் அடுத்த அடியென்ன பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்பது தான் அரசியல் வட்டார தற்போதைய அரசியல் டாக்காக இருக்கிறது

Chitra Suresh